08/03/2019

இயந்திரக் கண்கள்- 146 கவிதைப் போட்டி-முதலிடம்



இயந்திரக் கண்கள்
........இயற்கையை அறியுமா?!
இரும்பு நாக்குகள்
.........கரும்பை ருசிக்குமா?!
காய்ச்சல் மூக்கிலே
.........கஸ்தூரி மணக்குமா?!
கழுதைக் காதிலே
..........கவிதை இனிக்குமா?!

தண்ணீர் எல்லையை
...........மீன்கள் தாண்டலாம்!
கண்ணீர் இன்றியே
............தேசம் தோன்றலாம்!
எறும்பின் வயிற்றிலே
............எருமை பிறக்கலாம்!
கற்பனைக் காற்றிலே
............கவிதை உதித்தால்!

அண்டம் தாண்டிய
............அறிவு கூடலாம்!
பிண்டம் தாண்டிய
............அன்பு கூடலாம்!
கண்டம் தாண்டிய
............கருணை கூடலாம்
கற்பனை ஆற்றிலே
............ஞானம் பிறந்தால்!

கையில் சூரியன்
...........கானம் பாடலாம்!
பொய்கைத் தாமரை
.......பொய்யில் மலரலாம்!
கனவுக் கோட்டைகள்
............கானல் ஆகலாம்!
#கற்பனை_ஊற்றிலே
............கர்வம் பிறந்தால்!

✍️செ. இராசா



https://www.facebook.com/photo.php?fbid=2230727900578391&set=gm.2264815807170656&type=3&theater&ifg=1


146வது களஞ்சியம் கவிதைப் போட்டி
***********************************
கிடைத்த இடம்: முதலிடம்
நடுவர்: திரைப்படப் பாடலாசிரியர் நிகரன் அவர்கள்
அமைப்பு: தமிழ்ப்பட்டறை
தலைவர்: திரு. சேக்கிழார் ஐயா

1 comment:

வேல்கவி.பெ said...

அருமையான சிந்தனைக்கவிதை தங்களின் விஞ்ஞான வரிகளில் எழுச்சிமிகு மெய்யான கூற்றுகளை அடுக்கியுள்ளீர்கள் முடிவில் கர்வம் பிறந்தால் வாழ்வில் அனைத்தும் கானல் என்று அருமையாக முடித்துள்ளீர்கள் எழுச்சி கவிஞரே!

பாராட்டுக்கள் நல்வாழ்த்துக்கள் நற்சிந்தனையுடன் கூடிய இந்த தமிழ்படைப்பிற்க்கு கவிஞரே!