27/12/2025

படிக்கப் படிக்க

 

படிக்கப் படிக்க படியேற்றும் பாங்காய்
படிப்பே படியாம் படி
படிக்கப் படிக்க பகுத்துணரும் பார்வை
படிப்பின் பயனாம் படி
படிக்கப் படிக்க படிமமாய்ப் பற்றும்
படிப்பைப் புரிந்து படி
படிக்கும் பழக்கம் படைப்பைப் பெருக்கும்
படிப்பாய்ப் படைப்பாய்ப் பல
படிப்பால் படியேறி பல்கலைகள் பெற்றோர்
படிப்பினையைப் பார்த்துப் படி.

No comments: