ஏசப்பா ஏசப்பா எங்களோட ஏசப்பா
மீண்டுமிங்கே பிறந்து வாங்க ஏசப்பா
ஆசைப்பா ஆசைப்பா பார்க்கரொம்ப ஆசைப்பா
சீக்கிரமே மீள வேணும் ஏசப்பா
ஏசப்பா ஏசப்பா எங்களோட ஏசப்பா
பாவங்களைப் போக்கும் எங்க ஏசப்பா
ஆசைப்பா ஆசைப்பா புனிதமாக ஆசைப்பா
ஆலயத்தைத் தேடி வாரோம் ஏசப்பா
பிறந்திங்கே வாங்க இயேசு ராசா
பார்த்திட ரொம்ப ஆசை ராசா
பாவத்தைச் போக்கும் இயேசு ராசா
புனிதமாய் மாற ஆசை லேசா
கன்னிமேரி மகனாகப் பிறந்து வந்தீங்க
மனிதரோட மனிதராக வாழ்ந்து வந்தீங்க
ஞானஸ்நானம் பெற்றபின்னே ஞாயிறானீங்க
ஞாலத்துக்கே வெளிச்சந்தந்து புனிதரானீங்க
பகைய அன்பால வெல்லச் சொன்னீங்க
படுத்தும் பசிதீர்க்க உதவி செஞ்சீங்க
திருந்தி வருவோரை ஏற்கச் சொன்னீங்க
தியாகம் என்னான்னு புரிய வச்சீங்க
பிறந்திங்கே வாங்க இயேசு ராசா
பார்த்திட ரொம்ப ஆசை ராசா
பாவத்தைச் போக்கும் இயேசு ராசா
புனிதமாய் மாற ஆசை லேசா

No comments:
Post a Comment