தமிழ் கூறும் நல்லுலகில்; திரு
தமிழ் கூறிய நல்லபடம்: சிறை
இதைத்
திரையரங்கில் பார்ப்பதே முறை
குறைகூற முடியாத அளவு நிறை
முரட்டுத் தனமான சூழலில்
மெல்லியதாய் ஓர் காதல்..
அதிகாரம் குவிந்த கட்டமைப்பில்
திருக்குறளாய் ஓர் குரல்..
அப்துல் ரவூப்
பெயர்க் காரணம்
பெரும் ரணம்.
விக்ரம் பிரபு
டாணாக்காரனின் அடுத்த
வெற்றிப் பயணம்...
தமிழ்
தமிழ் திரையுலகம்
கொண்டாடப்பட வேண்டிய நபர்..
மொத்தத்தில் படம்
கண்டிப்பாக பார்க்க வேண்டிய
காவியம்.
செ. இராசா

No comments:
Post a Comment