22/12/2025

ஒருவரே பேசினால் சொற்பொழிவு

 

ஒருவரே பேசினால் சொற்பொழிவு
இருவர் பேசினால் உரையாடல்
கலந்து பேசினால் கூட்டம்
பலரும் பேசினால் குழப்பம்
தானே பேசினால் பைத்தியம்
தன்னையே பேசினால் தம்பட்டம்
மாணவர்முன் பேசினால் வகுப்பு
வானொலிமுன் பேசினால் தொகுப்பு
உயர்த்திவிடப் பேசினால் போதனை
உயர்ந்தபின் பேசினால் சாதனை
கடவுளிடம் பேசினால் பிரார்த்தனை
கடமைக்காய்ப் பேசினால் வேதனை
உருகிஉருகிப் பேசினால் காதல்
உரக்க உரக்கப் பேசினால் மோதல்
இலக்கணமாய்ப் பேசினால் கவிதை
தலைக்கனமாய்ப் பேசினால் மமதை
காரியமாய்ப் பேசினால் சாமர்த்தியம்
காவியமாய்ப் பேசினால் தாம்பத்தியம்
ஆள்வதற்காகப் பேசினால் அரசியல்
மீள்வதற்காகப் பேசினால் ஆன்மீகம்
கவிநடையில் பேசினால் கவியரங்கம்
பொதுநடையில் பேசினால் பட்டிமன்றம்
நிந்தித்துப் பேசினால் நீதி மன்றம்
சிந்தித்துப் பேசினால் நம்ம மன்றம்!
✍️செ. இராசா
*நம்ம - மனவளக்கலை மன்றம்

No comments: