நாம் ஒன்றை நோக்கிப் பயணிக்கும்போது நமக்கானப் பாதையை இந்தப் பிரபஞ்சமே காண்பிக்கும் என்பதை பலமுறை நான் அனுபவப் பூர்வமாக உணர்ந்துள்ளேன்.
இப்படித்தான் காலையில் ஒரு பதிவைப் பார்த்தவுடன் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு ஒரு வெண்பா எழுதினேன். தற்சமயம் அரசியல் பதிவைத் தவிர்க்க நினைப்பதால் அதுபற்றிய ஒரு குழப்பம் நிலவியது. சரியென்று எப்போதும்போல் தினமும் வாசிக்கும் தினம் ஒரு திருக்குறள் நூலைத் திறந்தால் நான் எழுதிய நகை பகை என்கிற வார்த்தைகள் மட்டுமல்லாது பண்புடையாரின் இயல்பு பற்றிய ஒரு அறிவிப்பும் என்னை யோசிக்க வைத்து அதற்கானத் தீர்வும் கூறியது. இதைநான் பலமுறை உணர்ந்திருந்தாலும் ஒரு பதிவாகவும் போட வேண்டும் என்று மனம் விரும்பியதால் இதை இப்போது இங்கேப் பதிவிடுகிறேன் உறவுகளே....

No comments:
Post a Comment