05/08/2021

அதுமட்டும் நடந்திட்டா ...அத்தோட முடிஞ்சிடும்

 


அதுமட்டும் நடந்திட்டா
...அத்தோட முடிஞ்சிடும்
இதுமட்டும் கிடைச்சிட்டா
...இத்தோட முடிஞ்சிடும்
இப்படியே பேசித்தான் எல்லோரும் போகுறோன்
அப்படியே இப்போதும் எப்போதும் பேசுறான்

இதில்...
எதுவும் மாறவில்லை- அது
ஏன்னு தெரியவில்லை...?! (2)

பொட்டிக்கடை சித்தப்பா பொழைக்கப் போனாரு
ஆறேழு வருசமா அங்கேயே நின்னாரு
கண்ணாலம் கட்டத்தான் இங்கே வந்தாரு
என்னாச்சுத் தெரியல‌ எங்கோப் போறாரு
வட்டி குட்டி போட்டுச்சோ?!
.....வச்ச நகை போச்சுதோ?!
மச்சு வீடு கட்டச்சொல்லி
...எந்தச் சித்தி கேட்டுச்சோ?
தூக்கிப்போட்ட பாஸ்போர்ட்ட துடைச்சு வச்சாரு
பொலபொலன்னு கண்ணீரால நனைச்சுப்புட்டாரு

 

---✍️செ. இராசா

No comments: