#இடைவெளி(யே)_இல்லை
#காமத்துப்பால்_18+&-
#ஒரே_எதுகையில்_குறள்_வெண்பாக்கள்![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
இடைவெளி இல்லா இதயப் பயணம்
இடையிலே நின்றால் இடர்
(1)![]()
![]()
நடையினை மாற்றி நதியென ஓடும்
கடைசித் துளியே கவி
(2)![]()
![]()
![]()
தடைகளைத் தாண்டி தழுவிட எண்ணி
உடைகளைத் தாண்டும் உளம்
(3)![]()
![]()
![]()
கிடைக்கா பொழுதில் கிடைத்திட ஏங்கிக்
கிடைத்தபின் பற்றும் கிறுக்கு
(4)![]()
![]()
அடையும் வரைக்கும் அடங்கா தவிப்பை
அடைந்தும் அடங்கா(து) அகம்
(5)![]()
![]()
![]()
கடைசி வரைக்கும் கரைகாணா காமம்
விடையின்றித் தேடும் வினா
(6)![]()
![]()
![]()
இடைஇடை கொள்ளும் இளமையின் ஊடல்
இடைஇடை கூடலின் ஈர்ப்பு
(7)![]()
![]()
![]()
எடைமேல் எடையேற்றி இடையூரும் போதும்
இடையூறாய் இல்லை எடை
(8.)![]()
![]()
![]()
![]()
![]()
![]()
குடைக்குள் மழையென கொட்டிடும் காமம்
அடைமழை ஆகும் அடை
(9)![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
கொடைபோல் பெருகும் கொடுக்கையில் இன்பம்
கடைவரை அன்பைக் கொடு
(10)![]()
![]()
![]()
![]()
![]()
செ. இராசா
#வள்ளுவர்_திங்கள்_174
30/08/2021
இடைவெளி(யே) இல்லை -- காமத்துப்பால் 18+&- வள்ளுவர் திங்கள் 174
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment