"சாமி இரண்டாயிட்டா
பூமி இரண்டாகுமே....." என்ற ஹேராம் படத்திற்காக வாலி எழுதிய வரிகள்தான் ஞாபகம் வருகிறது. 
உண்மைதானே....
 இங்கே சாமி கும்பிடுவதை வைத்தே பிரிந்துபோன நாடுகள் எத்தனை 
எத்தனை....அதுபோக இப்போதெல்லாம் குலத்திற்கு ஒரு சாமி என்றானதால் #கிருஷ்ண_ஜெயந்தி கொண்டாடினால் நீங்கள் #யாதவரா எனக் கேட்கிறார்கள். ஏற்கனவே #முனீஸ்வரர் #கருப்பர் #ஐயனார் போன்ற காவல் தெய்வங்கள் வழிபடுவோர்கள் ஒரு வகையினர் என்றால், அப்புறம்  #பிரகதீஸ்வரர் #ஆத்மநாதர் என்று நம்மூர் #சிவபெருமானைப் பேர் மாற்றிய கும்பல் வேறு வகையினர். இதிலும் #ISKON கிருஷ்ண வழிபாட்டிற்கும் நம்ம ஊர் #கண்ணன்_கோவில்_பஜனை வழிபாட்டிற்கும் வேறுபாடுகள் உள்ளன.
எப்படி
 சாதித்த தலைவர்கள் சாதியத் தலைவர்கள் ஆனார்களோ அதேபோல்தான் சாமிகளையும் 
சாதி வளையத்திற்குள்  அடைக்க முயல்கிறார்கள். அனைவருமே ஒன்று என்கிற 
ஒற்றுமை உணர்வு இருந்தால்தான் சாமிகளாவது சாதிய வளையத்திற்குள் சிக்காமல் 
தப்பிக்கும்.
செ. இராசா
இப்பதிவு யாரையும் புண்படுத்த அல்ல, பண்படுத்தவே....

No comments:
Post a Comment