10/08/2021

நுனிப்புல் மேயாதீர்

 


ஒரு நல்ல படைப்பைப் பதிவிடும்போது, அப்படைப்பின் அழகியலையும், அது படைக்கப்பட்டதற்கான நோக்கத்தையும் ஆராயாமல், எப்படியாவது குறை காணவேண்டும் என்கிற நோக்கில் தன்னுடைய சிற்றறிவால் ஏற்படும் சந்தேகங்களை நேரடியாகக் கேட்காமல், படைப்பில் குறையென்று சொல்லி அதன்மூலம் நாம் என்ன பதிலளிக்கிறோம் என்பதைக் காண சிலர் முகநூலில் வலம் வருகிறார்கள். உண்மையில் அவர்கள் தங்களை அதிமேதாவியாகக் காட்டிக்கொண்டு உலாவருபவர்கள். இவர்கள் நம் நட்புவட்டத்தில் இல்லாவிட்டாலும் நம் பதிவுகளை இரகசியமாக பார்ப்பவர்களே (நட்பில் இருப்பவர்களிலும் சிலர் உண்டென்பது தனிக்கதை).

நான் இங்கே சொல்ல வருவது என்னவென்றால், தயவுகூர்ந்து தங்களுக்குக் கேள்விகள் இருந்தால் நேர்மையாக நாசுக்காக நாகரிகமாகக் கேளுங்கள். நட்பில் இல்லாவிட்டாலும், நேரம் அனுமதித்தால் கட்டாயம் பதில் கிடைக்கும். ஒருவேளை தெரியாவிட்டால் தெரியாது என்கிற விடையாவது கிடைக்கும். தயவுகூர்ந்து....இனியும் எம் பக்கத்தில் மட்டுமல்லாமல், எங்கேயும் நுனிப்புல் மேயாதீர்.

தமிழ் எம் உயிர்!!!

✍️செ. இராசா

No comments: