ஒரு
அழகிய தீவைத்தேடி அனைவரும் வந்தார்கள். மதம், மொழி, சாதி, இன உணர்வுகள்
என்ற எந்த அடையாளமும் இன்றி எங்கெங்கோ இருந்து வந்த அனைவரும் ஆரம்ப
காலத்தில் ஒற்றுமையாக ஒருவரை ஒருவர் பாராட்டி மகிழ்ந்தார்கள். பிறகு
காலங்கள் செல்ல செல்ல தனித்தனிக் குழுவாய்க் கூடி விவாதித்து
தங்களுக்குள்ளேயே பாராட்டி மகிழ்ந்தார்கள். பின்னர் தங்களின் அடையாளம்
சிறிது சிறிதாக வெளிப்படவே குழுக் குழுவாகவும் தனித்தனியாகவும்
அவர்களுக்குள்ளாக சண்டையும் பிணக்குகளும் வர ஆரம்பித்தது. பின்னர்
ஒவ்வொருவரும் அந்த அழகிய தீவை விட்டு விலகிப் போனார்கள். இறுதியில்
அந்தத்தீவில் ஒரு சிலர் மட்டுமே போகவும் முடியாமல் இருக்கவும் முடியாமல்
என்ன செய்யலாம் என்று யோசித்தபடி இப்படி எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படிக்கு,
முகநூல் தீவில் இருந்து ஒரு குரல்.
செ. இராசா
No comments:
Post a Comment