ஊடக நண்பர்களே
ஊடக நண்பர்களே
தமிழில் பேசுங்கள்
ஊடக நண்பர்களே (2)
தமிழன் பேசுறப்போ தமிழ் இங்கே காணலிங்கோ..
தமிழை விட்டுப்புட்டா தமிழ் எங்கே வாழுமுங்கோ..
தமிழே இல்லையின்னா தமிழ்இனம்
இல்லையிங்கோ
தமிழினம் வேணுமுன்னா தமிழ்மொழி
வேணுமுங்க..
மீண்டும் மீட்டெடுக்க ஊடகத்தால் முடியுமுங்கோ...
நீங்க மனசுவச்சால் மாற்றமிங்கே
சாத்தியங்கோ...
செ.இராசா
(துபாயில் தமிழ் FM என்ற பெயரில் தமிங்கிலம் பேசுவதைக்கேட்டு உருவானது இப்பாடல். துபாயில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும்தான்....)
No comments:
Post a Comment