உரைக்க முடியா பரம்பொருள்போல் 
விள(ல)க்க முடியா மறைபொருளே.. 
இரவில் ஒளிரும் விண்மீன்போல்
என்னுள் ஒளிரும் கண்நிலவே..
நம்மைப் பற்றி அலர்தூற்றி 
நம்முள் தீயை ஏற்றிவிட்டார்..
பற்றிய நெருப்பை அணைத்திடவே   
பற்றினாய் நீயும் தனிமையிலே 
உன்-மெய் கண்ட உண்மையிலே 
என்னை நானே மறந்துவிட்டேன்..
முத்தம் தந்திட எண்ணுகையில் 
பொத்தென விழுந்தேன் என் செய்ய?!!
#கனவே_கலையாதே
#வள்ளுவர்_திங்கள்_132
செ. இராசா 

No comments:
Post a Comment