01/10/2020

ஆத்திசூடி விளக்கம் பகுதி-5, தகர_வருக்கம்

 

#ஆத்திசூடி_விளக்கம்_பகுதி_5
#குறள்_வெண்பாவில்_தெளிவுரை
#தகர_வருக்கம்

#தக்கோ_னெனத்திரி_1
இதற்காக உள்ளோன் இவனே எனும்போல்
அதற்கானத் தக்கோனாய் ஆகு

#தானமது_விரும்பு_2
தானதர்ம காரியத்தில் தன்னலம் பாராமல்
வானம்போல் நிற்க விரும்பு

#திருமாலுக்கு_அடிமை_செய்_3
திருமால் திருவடியில் சேவகனாய்ச் சேர்ந்தால்
திருவருள் ஓடிவரும் சேர்

#தீவினை_யகற்று_4
நல்வினை தீவினையை நன்றாக ஆராய்ந்தே
நல்வினையால் தீவினையை நீக்கு

#துன்பத்திற்_கிடங்கொடேல்_5
துன்பம் வரும்வழியைத் தூர்க்கின்ற ஞானத்தால்
துன்பம் வராமல் துரத்து

#தூக்கி_வினைசெய்_6
சீர்தூக்கி நன்றாகச் செய்கின்ற காரியம்
பார்போற்ற வைத்திடும் பார்

#தெய்வ_மிகழேல்_7
தெய்வமே இல்லையெனத் தேவையின்றி தூற்றுதல்
மெய்ப்பொருள் காணார் மொழி

#தேசத்தோ_டொத்துவாழ்_8
வாழ்கின்ற தேசத்தை வையாமல் எந்நாளும்
வாழ்த்துவதை வாழ்த்தியே வாழ்

#தையல்சொல்_கேளேல்_9
என்றைக்கும் எப்போதும் இல்லாள்சொல் கேளாமல்
தன்னாய்வும் செய்தால் சரி

#தொன்மை_மறவேல்_10
முன்னோர்கள் காட்டிய முக்கிய நன்நெறியை
என்றும் மறவா திரு

#தோற்பன_தொடரேல்_11
தோற்குமென உள்ளுணர்வு சொல்கின்ற காரியத்தை
ஏற்காமல் சும்மா இரு

✍️செ.இராசா

No comments: