09/10/2020

ஆத்திசூடி விளக்கம் பகுதி-8, மகர வருக்கம்

#ஆத்திசூடி_விளக்கம்_பகுதி_8
#குறள்_வெண்பாவில்_தெளிவுரை
#மகர_வருக்கம்

,#மனந்தடு_மாறேல்_1
மனத்தை வளமாக்கும் மார்க்கத்தைக் கற்று
மனந்தடு மாறாமல் நில்

#மாற்றானுக்_கிடங்கொடேல்_2
மாற்றங்கள் வேண்டுமென மாற்றானை ஏற்றிவிட்டு
கூற்றனிடம் கொள்ளாதே கூட்டு.

#மிகைபடச்_சொல்லேல்_3
ஒன்றை இரண்டாக்கி உள்ளதை நாலாக்கி
என்றைக்கும் சொல்லேல் மிகை

#மீதூண்_விரும்பேல்_4
மீதமாக உள்ளதென்றும் வீணாகப் போகுதென்றும்
ஊதவூத தள்ளாதே ஊண்

#முனைமுகத்து_நில்லேல்_5
சண்டை நடக்குமிடம் சந்தியிலே நிற்காதே
மண்டை உடைந்துவிடும் போ

#மூர்க்கரோ_டிணங்கேல்_6
மூர்க்கத் தனமுள்ள முன்கோபி யாரையும்
சேர்க்காமல் வாழ்தல் சிறப்பு

#மெல்லினல்லாள்_தோள்சேர்_7
மெல்லின நல்லாளாய் வீற்றிருக்கும் இல்லாளின்

மெல்லிய தோளோடு சேர்

#மேன்மக்கள்_சொற்கேள்_8
மேன்மை குணங்கொண்ட மேலானோர் சொல்கேட்டுப்
பாங்காய் வளர்வதேப் பண்பு

#மைவிழியார்_மனையகல்_9
மைதடவி ஈர்க்கின்ற மைவிழியார் கையென்றும்
பைதடவிப் பார்க்கும் விலகு

#மொழிவ_தறமொழி_10
அறமில்லா வார்த்தை அணுவளவும் வேண்டாம்
அறமுள்ள வார்த்தையாய்ப் பேசு

#மோகத்தை_முனி_11
மோகத்தின் வேகத்தில் மூள்கின்ற காமத்தை
யோகத்தின் மூலம் அகற்று

✍️செ.இராசா

No comments: