01/06/2020

அறிவு

#அறிவு


கற்றோர் சபையினில் கற்றிடா ஒன்றினைக்
கற்றது போலவே கல்லார் கதைப்பது
பாடகர் போலவே பாவி'க்கும் மாந்தரால்
பாடல்கள் பட்டிடும் பாடு!

(1) #இரு_விகற்ப_இன்னிசை_வெண்பா

அறியாமை யாதென ஆய்ந்திடும் மாந்தர்
அறிவாளி ஆகிறார் அன்றே- அறியார்
அறிந்த அறிவினை ஆழியாய் எண்ணி
அறிவிலி ஆகிறார் ஆம்!

(2)#ஒரு_விகற்ப_நேரிசை_வெண்பா

எண்சாண் உடம்பை இயக்கிடும் மூளையில்
எண்ணிய தெல்லாம் இயங்கிடும்- எண்ணங்கள்
நுண்ணிய ஒன்றாய் நுழைந்திட கிட்டிடும்
நுண்மாண் நுழைபுல நோக்கு!

(3)#ஒரு_விகற்ப_நேரிசை_வெண்பா

✍️செ.இராசா

(நுண்மாண் நுழைபுலம்- துள்ளிய அறிவு- In and out)

No comments: