07/06/2020

குறள் விளையாட்டு



#குறள்_விளையாட்டு

குறள் வெண்பாவில் நானும் Anandh Umesh தம்பியும் விளையாடியது... கண்டிப்பாக நீங்களும் இரசிப்பீர்கள் என்றே நினைக்கின்றேன்

#முதலில்_நான்_எழுதிய_குறள்_1

தொந்தரவு செஞ்சீனா தூக்கி அடிச்சிடுவேன்
வந்திங்கு காட்டாதே வால்

#தம்பியின்_முதல்_பின்னூட்டக்_குறள்_2

தூக்கி யடிச்சாலும் தோதாகத் தப்பிக்கத்
தாக்குதல் செல்லாது தான்

#நான்_3
தானொன்றும் செய்யாமல் சாத்துவதை வாங்கிவிட்டு
கோனென்று சொல்பவன் யார்?!

#தம்பி_4
பார்த்தநாள் பவ்வியமாய்ப் பாவை யிருப்பாளாம்
சேர்ந்ததும் வைப்பாள் சிறை.

#நான்_5
சிறையிட்ட கம்பிக்குள் சிக்கியவன் போலே
முறையிட்டு நிற்பவன் யார்?

#தம்பி_6
விரும்பிய பாவத்தால் வீட்டுக்குள் சிக்கும்
புருசன் வயிற்றில் புளி.

#நான்_7
புளிக்கும் உணவையும் பூ'வென்று சொல்லி
கிளிபோல் கதைப்பவன் யார்?

#தம்பி_8
யப்பா அவன்தான்பா யார்வந்து கேட்டாலும்
துப்பும் தரவேண்டாம் பா

#நான்_9
பாப்பா வரம்வேண்டி பவ்யமாய்க் கொஞ்சியபின்
போப்பா எனமொழிவோன் யார்?

#தம்பி_10_11

அப்பப்பா போதுமப்பா அப்பாவி ஆணப்பா
தப்பென்று சொல்லுதல்தப் பா

கப்பென்று போர்த்துப்பா கண்பலவும் பார்க்குதப்பா
இப்ப முடியாதப் பா

😊😊😊😊😀😀😀😀😀😀🙏🙏🙏🙏

✍️செ. இராசா
— with Anandh Umesh.

No comments: