உங்களுக்கு ஒன்று தெரியுமா?!
கிராமியப் பாடல் முதல் கானாப் பாடல் வரை,
சினிமா பாடல் முதல் ஆல்பம் பாடல் வரை, பக்திப் பாடல் முதல் அனைத்து மசாலாப் பாடல்கள் வரை. தாலாட்டு பாடல்கள் முதல் சோகப் பாடல்கள் வரை, தமிழ் மொழி முதல் எந்த மொழிப் பாடாலானாலும் ஒரு விடயம் இல்லாமல் உலகில் எந்தப் பாடலும் கிடையாது. அது என்ன தெரியுமா?!
அது தாங்க "இயைபுத் தொடை" (Rhymes)
ஆமாங்க ஒரு பாடலின் அடிகளின் இறுதியில் ஒன்றி வருவதே இயைபுத் தொடை...
எடுத்துக்காட்டு பார்ப்போமா...
1. கிராமியப் பாடல்
மானே உன்னைத் தானே எண்ணி நானே #பாடுறேன்
ராவா தண்ணி போட்டுப்புட்டு தானே #வாடுறேன்
2. சென்னை கானா
என் மைமா பேரு தாண்டா #அஞ்சல
அவ கபில்னு பூந்துட்டாடா #நெஞ்சுல
3.சினிமாப் பாடல்
உன்னை நினைச்சு உருகிப்போனேன் #மெழுகா
நெஞ்ச உதைச்சு உதைச்சு பறந்துபோனா #அழகா
4. ஆல்பம் பாடல்
முட்டு முட்டு என்ன #முட்டு
இடிச்ச போற வெக்கத்த #விட்டு
5. பக்திப் பாடல்
நீயல்லால் தெய்வம் #இல்லை
எனது நெஞ்சே நீ வாழும் #எல்லை
6. மசாலாப் பாடல்
ராத்திரி நேரத்து #பூஜையில்
ரகசிய தரிசன #ஆசையில்
ஆஆ ஆஆ தினம் #ஆராதனை
ஆஆ ஆஆ அதில் #சுகவேதனை
7. தாலாட்டு பாடல்
மலர்ந்தும் மலராத பாதி மலர்
போல வளரும் விழி #வண்ணமே
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த #கலையன்னமே
8. சோகப் பாடல்
என் தாய் எனும் கோயிலை
காக்க மறந்திட்ட பாவியடி #கிளியே
என் வாயும் வயிறையும்
போற்றி வளர்த்திட்ட பாவியடி #கிளியே
9. Hindi Song
kisi roz tumse mulakat #hogi
Meri jaan us din mere sath #hogi
10. Arabic Song
Inta #mAallem
wa Hna minak #nitAallem
inta mAallem
wa Hna minak #nitAallem
11. English Song
She's so #dangerous
The girl is so #dangerous
12. Punjabi Song
Ho gayi tu balle #balle
Ho jayegi balle #balle..
இன்னும் இன்னும் சொல்லலாம்....இனி எல்லா மொழிப் பாடல்களையும் கூர்ந்து கவனியுங்கள். இந்த இயைபுத் தொடை உள்ளது புரியும்.
இப்போது மீண்டும் கவனியுங்கள் நம்ம தமிழ் எப்படி இயைபுத் தொடையை ஆரம்ப காலத்தில் இருந்தே பயன்படுத்தி வந்தது என்பது புரியும்.
(எனக்குத் தெரிந்த விடயங்களைப் பகிர்வதே இப்பதிவின் நோக்கம்)
தொடரும்..
✍️செ. இராசா
அடுத்த பதிவு இங்கே:
https://m.facebook.com/
No comments:
Post a Comment