அரசாங்கப் பள்ளியெனில் ஐய்யே என்பர்!
அரசாங்க வேலையெனில் ஆகா வென்பர்!
தேசியம் எனச்சொன்னால் சிச்சீ என்பர்!
தேசிய விருதென்றால் ஹிஹீ என்பர்!
சாதியம் இல்லையென்று சத்தியம் செய்வர்!
சாதிமதம் யாதென்று சப்தமின்றிக் கேட்பர்!
எதிர்க்கட்சி ஆனால் டாஸ்மாக் கேடென்பர்!
ஆளுங்கட்சி ஆனால் டாஸ்மாக் நீடென்பர்!
திராவிடம் என்றவுடன் பகுத்தறிவு வாதியென்பர்!
தமிழினம் என்றவுடன் பிரிவினை வாதியென்பர்
செ. இராசா
No comments:
Post a Comment