உருவ வழிபாட்டில் உண்மையில்லை என்போர்
...உருவச் சிலையெல்லாம் வேண்டாமே என்பர்!
அருவ வழிபாட்டில் ஆழத்தைக் கண்டோர்
....அருவம் உயர்வென்றே அஃதையே ஏற்பர்!
அருவ உருவத்தை அறியாத பேரோ
..அதையும் சிலையென்றே ஆயாமல் சொல்வர்!
அருவம் உருவம் அருவுருவம் யாவும்
அனைத்தும் சிவமென்றே கண்டவரும் யாரோ?
செ. இராசா
சைவத்தை முழுமையாகப் புரிந்தவர்கள்கூட சில விடயங்களை சரிசெய்ய முற்படுவதில்லை. நம் சைவத்தில் மட்டும்தான் இறைவனுக்கு மனித வடிவம் கொடுத்து உருவமாகவும், எந்த உருவமும் அல்லாத அருவ வடிவத்திலும், அதேபோல் உருவத்திலும் சேராத அருவத்திலும் சேராத வடிவமான லிங்க வடிவிலும் சிவத்தை வழிபடுகிறோம்.
திருவாசகம் எழுதப்பெற்ற தளமான ஆவுடையார் கோவிலில் இறைவனும் இறைவியும் அருவ வடிவத்தில்தான் உள்ளனர். பெயர்கூட பாருங்கள் ஆத்மநாதர், யோகாம்பாள் என்றே உள்ளது. அருவம் எங்கும் பரவியுள்ளதால் தீபாராதனை மற்று விழுந்து கும்பிடுவதெல்லாம் கிடையாது. இப்படியெல்லாம் இருந்த அருவ வழிபாட்டை இடையில் வந்த யாரோ சிலர் சிவ லிங்கத்தை நிறுவியுள்ளார்கள். இதை இன்று மீண்டும் அங்குள்ள பூசாரிமூலம் உறுதிப்படுத்திக்கொண்டேன். தத்துவார்த்தமான உண்மைகளைப் புரிந்து கொள்ள முடியாதவர்களால்தான் இப்படி நடந்துவிடுகிறது. கருத்தை உணர்ந்து கடவுளை வழிபட்டால் உண்மையில் மெய்ஞானம் மெய்சிலிர்க்க வைக்கும்.
சிவம் transformer என்றால் சக்தி அதில் ஓடும் energy. பெயர் பொருத்தம்கூடப் பாருங்கள் சக்தி- ஆற்றல்- power- energy......etc
எல்லாப் பொருள்களும் பார்வைக்கு சிவனே என்றுதான் உள்ளது. ஆனால் அதனுள் எலெக்ட்ரான் புரோட்டான் நியூட்ரான் என்று உள்ளே ஆற்றல் (சக்தி) ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த ஆற்றலின் வடிவம்தான் நடராஜ தத்துவம். இப்படித்தாங்க நாம் சைவத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஓம் நமசிவாய!!!
செ. இராசா
(இடம்: ஆவுடையார் கோவில்)
No comments:
Post a Comment