13/02/2022

இதோ எம் முத்தங்கள்

அன்பின் உச்சத்தில்
அழுத்தமான முத்திரையாய்

உணர்வின் எச்சத்தில்
உதடெழுதும் கவிதையாய்

மொழியில்லா நேரத்தில்
மௌனமான மெல்லிசையாய்

தூரமில்லா நேசத்தில்
ஈரிதழின் சான்றிதழாய்

இதோ எம் முத்தங்கள்!!!

✍️செ. இராசா

#உலக_முத்த_தினம்

No comments: