07/02/2022

அறிவில்லாதவன் யார்? ----- வள்ளுவர் திங்கள்- 197


மற்றவரை என்றைக்கும் மட்டமாய்ப் பேசுவது
சிற்றறிவு கொண்டோர் செயல்
(1)

எல்லாம் அறிந்ததுபோல் எப்போதும் பேசுவோரைக்
கல்லாராய் வைப்பர் கணக்கு
(2)

வீண்பெருமை வீராப்பு வெட்டிச் சினம்யாவும்
தன்னடக்கம் இல்லார் செயல்
(3)

ஊரே எரிகையில் உட்கார்ந்து வாசித்த
நீரோபோல் ஏனோ சிலர்
(4)

அறியாத ஒன்றை அறிந்ததாய்ச் சொல்வோர்
அறிவில்லா மூடர் அறி
(5)

அறியாமை யாதென ஆய்ந்தறி வோரே
அறிவுள்ளோர் ஆவார் அறி
(6)

அகங்காரம் ஆர்ப்பாட்டம் அத்தனையும் வந்தால்
அகவொளி போகும் அறி
(7)

பிறரை மதிக்காமல் பேசிடும் போக்கும்
அறச்செயல் இல்லை அறி
(8)

குரலை உயர்த்திக் குரைக்கின்ற நாயின்
குரல்வளம் மாறுமா கூறு?
(9)

அவரவர் மூளைக்குள் அத்தனைதான் என்றால்
எவர்சொல்லி என்னாகும் இங்கு?
(10)

No comments: