என்னதான் நாங்கள்
உந்தன் வம்ச வீட்டில் குடியிருந்தாலும்
உன் பார்வை என்னவோ
எங்கள்மேல் மட்டும்தான்...
இல்லையெனில்....
உன் கடைக்கண் பார்வைக்கே
தன் உடைகளைக் களைந்துவிட்டு;
நிர்வாணக் கோலமாய்
நிற்போரை உதறிவிட்டு;
எங்கள் மேல் மட்டும்
இப்படிக் காட்டு காட்டென்று காட்டுவாயா?
உன் உக்கிர வேகத்திற்கு
ஈடு கொடுக்க முடியாமல்
வியர்வை வெள்ளத்திற்கு
அணை கட்ட முடியாமல்
அறைக்குள் முடங்குவோரை
ஆராய்ந்து பார்த்தாயா?
அப்பப்பா....
உனக்குள்தான் எத்தனை ஆற்றல்?
கொஞ்சம்..
சூட்டைக் குறை சூரியனே
விடியல்தர இது ஒன்றும் தமிழ்நாடல்ல
வெயில் கொளுத்தும் அரபு நாடு
08/06/2021
இது ஒன்றும் தமிழ்நாடல்ல
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment