04/06/2021

நாகராஜ்

 



நாகராஜ் என்கின்ற நட்பினைப் பெற்றபின்
யோகராஜ் ஆனேனே நான்
 
நன்றி நண்பா
 
இவர் என் பள்ளி நண்பர். மேலூரில் இருந்து சிவகங்கையில் வந்து 11 ஆம் வகுப்பைப் படித்தார். அன்றைய வருடம் புத்தகங்கள் சரியான நேரத்தில் வரவில்லை என்பதால் பாடங்கள் ஏதும் நடக்காமல் மரத்தடியிலேயே எங்கள் வாழ்க்கை கழிந்தது. அப்போதுதான் ரங்கீலா ஹம்ஆப்கே ஹைன்கோன் போன்ற ஹிந்திப்படங்கள் சிவகங்கை திரையரங்குகளிலும் வந்தது. அதையெல்லாம் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் இந்த மேலூர் நண்பர்களான நாகராஜ் மற்றும் ஜெயகாந்தன் போன்றவர்களே..... அது 1996 என்று நினைக்கிறேன். அதற்குப்பிறகு 2014ல் என் நிறுவனத்தில் liftல் போகும்போது எதேச்சையாக பேசும்போது அவர்தான் என் பழைய நண்பர் என்று தெரிந்து கொண்டபோது நான் பெற்ற ஆனந்தத்திற்கு ஒரு அளவே இல்லை...
அது இன்றும் தொடர்கிறது...
 
நன்றி நண்பா..

No comments: