எந்தையும் தாயும் 
எனையீன்ற அந்நாளில்    
என்னென்ன எண்ணினாரோ? -உண்மையில் 
என்னென்ன எண்ணினாரோ?
மண்டை பெருத்திட்ட 
மாயக் குரங்கெனக்    
கண்டதும் கத்தினாரோ?- இல்லைக் 
கண்களைப் பொத்தினாரோ?
கண்மை நிறங்கொண்ட 
காக்கா இனமென
அன்னத்தைத் தேடினாரோ- இல்லை 
அண்டாமல் ஓடினாரோ?
மூக்கு முழியுள்ள 
மூஞ்சியைக் கண்டதும் 
மூக்கினைச் சிந்தினாரோ- இல்லை 
மூர்ச்சையில் சிக்கினாரோ?
ஓவென்று கத்தியே 
ஓங்கி ஒலித்ததால் 
கோ-வென்று பேரிட்டாரோ- சரி 
போவென்று பேரிட்டாரோ
செ. இராசா 
(இனிய பெற்றோர் தின நல்வாழ்த்துகள் அம்மா அப்பா)

No comments:
Post a Comment