என்
குருநாதர் கவிஞர் சின்னக் கண்ணதாசர் விக்டர்தாஸ் கவிதைகள் அண்ணா அவர்கள்
எனக்கு பாடல்பற்றி ஒரு முக்கிய அறிவுரை கூறியிருந்தார்கள். அதாவது ஒரு
பாட்டு எழுதும்போது நம்மால் மெட்டுப் போடமுடியும் என்றாலும் அந்த மெட்டை
இசையமைப்பாளருக்குத் தெரிவிக்காமல் வெறும் வரிகளை மட்டுமே அனுப்பிவைக்க
வேண்டும் என்பார்கள். ஆனால் பலமுறை நான் அவரின் பேச்சை மீறிய சீடனாகவே
இருந்துள்ளேன் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரின் மெய்வாக்கைக் கேட்காமல் இன்றும் என் மகனுக்காக ஒரு பாடலை எழுதி என் அன்பு இசைஞர் இலங்கை சுதாகரன் Rhythms Suda
அண்ணா அவர்களுக்கு வழக்கம்போல் மெட்டையும் சேர்த்து அனுப்பி வைத்தேன்.
அவரிடமிருந்து பதிலே வரவில்லை. பதில் வரவில்லையென்றால் ஏதோ குறையென்று
அர்த்தம் என்பதைப் புரிந்து கொண்டு கேட்டபோது பாடல் மெட்டு கானாபோல் உள்ளதே
என்றார். ஆமாம்...மகள் பாடலில் இருந்து வேறுபடுத்தவே அப்படி இருக்கட்டுமே
என்றேன். அவர் உடனேயே எனக்கு எப்போதும்போல் தன் மெட்டிலேயே தன் குரலில்
பாடி அனுப்பி வைத்தார் பாருங்கள். ப்பா.... அசந்து போனேன்.
இதற்குத்தான் குருவின் பேச்சை வேத வாக்காக கேட்க வேண்டுமென்பது.
மன்னியுங்கள் குரு அண்ணா.....
மனமார்ந்த நன்றி இசைஞர் அண்ணா
16/06/2021
பாடல்பற்றி--- ஒரு முக்கிய அறிவுரை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment