மனைவியை சமாளிக்கும் 
மந்திரம் யாதென்று  
அண்ணனின் உதவியை 
தம்பியும் நாடிவர   
அப்படி இப்படியென 
அண்ணனும் அள்ளிவிட 
சந்தோச மிகுதியிலே  
தம்பியும் துள்ளிவிட  
என்ன சத்தமென
அண்ணியார் பாய்ந்துவர 
நிலவரம் முழுவதுமே 
கலவரமாய் மாறிவிட 
தன்னிலை உணர்ந்தவனாய்  
தலைதெறிக்க தம்பியோட 
வழுக்கி விழுந்தானாம்  
வாசற் படி மீது....![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()

No comments:
Post a Comment