11/09/2020

அன்பின் அகரம் என்றாலே அம்மாதான்

 #மெட்டு_இதயம்_என்றும்_உனக்காக

 
அன்பின் அகரம் என்றாலே அம்மாதான்
தன் மெய்யாலே மெய்தந்த தெய்வம் தான்
(1*2)
அவள்போல யாரு?
அவள்தானே வேரு
அவளாளே பாரு
அவளின்றி யாரு
அம்மா...
தன்னலம் இல்லா தனித்துவம் என்றால் அம்மாதான்!
கண்மலர் கொண்டே கொஞ்சிடும் குலமகள் அம்மாதான்!
அன்றுபோல் இன்றும் குழந்தையாய்க் காண்பவள் அம்மாதான்!
உண்மையில் என்றும் உன்-மெய்யாய் நிற்பவள் அம்மாதான்!
 
ஆற்றலும் நீ....ஊக்கமும் நீ
ஆயிரம் ஆயிரம் சாமியும் நீ
 
அம்மா.. அம்மா...அம்மா... அம்மா
அம்மா.. அம்மா...அம்மா.. அம்மா
 
வாசலை நோக்கியே வாசம் செய்பவள் அம்மாதான்!
வாடிய பயிர்போல் வாடிப் போபவள் அம்மா தான்!
வந்ததும் பிள்ளையின் வயிற்றைப் பார்ப்பவள் அம்மாதான்!
எந்நிலை ஆயினும் என்றைக்கும் நிற்பவள்
அம்மாதான்!
 
ஆற்றலும் நீ....ஊக்கமும் நீ
ஆயிரம் ஆயிரம் சாமியும் நீ
அம்மா.. அம்மா...அம்மா... அம்மா
அம்மா.. அம்மா...அம்மா.. அம்மா
✍️செ.இராசா

No comments: