12/04/2019

அப்பா டேய்....


ஒன்று வாங்கினால்
ஒன்று இலவசம்
என்று வாங்கியா
வந்தேன் உன்வசம்?!!

உந்தன் தவறினால்
வந்த பிள்ளை நான்
வந்த தவறுக்கா
இந்தத் தண்டனை?!!

அகப்பை நீரிலே
அடைத்து வைத்தநீ
அங்காடிப் பையிலே
அடைத்தல் நியாயமா?!

அம்மைப் பையிலே
அம்மணக் கோலம்போல்
கட்டைப் பையிலே
கோமணக் கோலமா?!!

அப்பா டேய்....

✍️செ. இராசா
பட உதவி: திருT Piratheepan அவர்கள்
மோகனன், பெனடிக் அருள் and 39 ot

No comments: