விடியும் முன்னால
வேகமா எந்திருச்சு
குளிச்சும் குளிக்காம
கூட்டமா பஸ்ஸிலேறி
அடிக்கும் வெக்கையில
அசராம வேலை பார்த்து
ஊத்தும் வியர்வையில
உசுரையே நனையவிட்டு
வெந்த சோறெல்லாம்
நொந்தே போனாலும்
அதையும் உள்ளதள்ளி
அப்படியே சாஞ்சாக்க.....
சொந்த சோகமெல்லாம்
கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கும்..
புல்லு மெத்தையில
எல்லாமே தூங்கிவிடும்
✍️செ. இராசா
பட உதவி: திரு. Antony Satheesh

No comments:
Post a Comment