சனநாயகம்-பகுத்தறிவு-அரசியல்
(1)
 அடிக்கடி நிறம் மா(ற்)றி
 அழுது கொண்டிருக்கிறது
 சனநாயகம்
 
 (2)
 நடக்கும் கூத்துகளை
 நம்ப மறுக்கிறது
 பகுத்தறிவு
 
 (3)
 அகத்தின் வெறுப்பை
 மறைக்க முயல்கிறது
 போலிப் புன்னகை
 
 (4)
 நிலைமைக்கு ஏற்ப
 நிறம் மாறும் உயிரினம்
 அரசியல் தலைவர்கள்
 
 ✍️செ. இராசா 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment