வானம் வசமாக
 அழகு முத்துகள் வேண்டுமென்றால்
 ஆழக் கடலுக்குள் மூழ்கிடுவாய்!
 மின்னும் வைரங்கள் வேண்டுமென்றால்
 மண்ணின் ஆழத்தில் சென்றிடுவாய்!
 
 வாழ்வை வளமாக்க வேண்டுமென்றால்
 வாட்டும் வருத்தத்தை உதறிடுவாய்!
 வானம் வசமாக வேண்டுமென்றால்
 மீண்டு(ம்) விழிப்போடு முயன்றிடுவாய்!
 
 ✍️செ. இராசா 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment