காந்தியே வந்தாலும்
மூக்கில் கைவைத்து
முணங்கிடுவார் இப்படி;
கடையைப் பூட்டியதாய்
கதைவிடும் தோழர்களே..
அஞ்சு பத்தென்று
அஞ்சாமல் ஏற்றிவைத்து
கொஞ்சமும் இரக்கமின்றி
கொள்ளைலாபம் பார்ப்பீரே..
கடுமையாய் விலையேற்றி
கண்டபடி விற்பதற்கா
விடுமுறை நாளென்று
விளம்பரம் செய்கின்றீர்...?!
காலைக் குடிமக்கள்
காலையில் குடிப்பதற்கும்
நடுநிசி மாந்தரெல்லாம்
நன்றாகக் குடிப்பதெற்கும்
கடையை அடைத்துவிட்டு
கருணையைத் திறப்பீரே...
இன்னும்....
எதற்கய்யா நாடகம்?
சுதந்திர பூமியிது
தொடருங்கள் சுதந்திரமாய்...
No comments:
Post a Comment