சிறுசிறு பிரச்சினையை
...சிந்தனையில் ஏற்றாமல்
......சீக்கிரமே ஏறி வருவாய்!
சிறுமதி படைத்தோரை 
...எள்ளளவும் எண்ணாமல் 
......தீர்க்கமுற ஓர்ந்து தெளிவாய்!
மறுமுறை விழுந்தாலும்
...நம்பிக்கை வீழாமல்
.....நாயகனாய் மீண்டும் எழுவாய்!
பெறுமதி குறையுமெனில்
...பேரளவில் பேசாமல் 
......பின்வாங்கி முன்னர் விரைவாய்!
செ. இராசா 
No comments:
Post a Comment