29/11/2022

பந்து

  


#பந்து

கைகளால் அடித்தால் கைப்பந்தாம்
கால்களால் உதைத்தால் கால்பந்தாம்
கூடைக்குள் தள்ளினால் கூடைப்பந்தாம்
மட்டையால் விளாசினால் மட்டைப்பந்தாம்
ஆமாம்....
அது ஏன் பந்தை மட்டுமே வைத்து
இத்தனை விளையாட்டுகள்?!

ஒருவேளை
நாம் பூமிப்பந்தில் இருப்பதாலா?!
இருக்கலாம்....

சந்தேகமா?!
மேலே பாருங்கள் சூரியப்பந்து
அதோ...நிலாப்பந்து
அட..அத்தனைக் கோள்களுமே பந்துதானே..

அது மட்டுமா?
அம்மாவின் அண்டத்தில்
கருப்பந்தாய் தோன்றி
உருப்பந்தாய் உடலாகி
பனிக்குடப் பந்தில் பிறந்தோமே...
ஞாபகமில்லையா?!!

ஆம்...
ஒவ்வொரு அணுவும்
ஒவ்வொரு செல்லும்
ஒவ்வொரு துளியும்
ஒவ்வொரு கனியும்
ஒவ்வொரு பந்துக்கள் தானே‌...

இங்கே...
நாம் ஆடுவது மட்டுமா பந்தாட்டம்?!
நம்மை வைத்தும் ஆடுகிறார்களே..
அதுவும் பந்தாட்டம்தானே?!

சொந்தங்களைக் கூட
பந்துக்கள் என்கிறார்களே...அது ஏன்?
பந்தாடப்படுவதலா?
இருக்கலாம்...

இந்தப் பந்தை வைத்துதான்
எத்தனை அரசியல்கள்?
எத்தனை சூதாட்டங்கள்?
எத்தனை கேலிகள்?
எத்தனை கிண்டல்கள்?
இவை எல்லாம் எதற்காக?
வெற்றி தோல்விக்காகவா?

இல்லை..
இல்லவே இல்லை..
நானும் உள்ளேனென்று காட்டவே...

✍️செ. இராசா

28/11/2022

ஔவைத் திங்கள்- 18 ------------- பணம் என்னடா பணம்


பணம்காசு பாராமல் பார்க்கின்ற நட்பில்
பிணக்கேதும் தோன்றாமல் பேசு
(1)
 
காசிற்கு மட்டாம் கலையென்று சொல்பவனை
தாசிபோல் வைப்பர் தரம்
(2)
 
அறமின்றி சேர்க்கின்ற அத்தனை காசும்
துறந்துவிடும் ஓர்நாள் துடைத்து
(3)
 
தேவைக்காய் சேர்த்தபின்னும் சேர்க்கின்ற செல்வங்கள்
பார்வைக்கே மட்டும் பணம்
(4)
 
கொடுக்கக் கொடுக்கத்தான் கூடிடும் என்பர்
எடுப்பதில் ஏதேனும் ஈ
(5)
 
பணம்பணம் என்றுசிலர் பைத்தியம்போல் ஓடி
கணம்கூட வாழ்வதில்லை காண்
(6)
 
பணவீக்கம் வந்தால் பணத்தின் மதிப்பும்
பிணவீக்கம் போல்தான் பிறகு
(7)
 
பணநோக்கில் மட்டும் பழகிடும் நட்பின்
குணநோக்கம் அறிந்து குறை
(8)
 
பேர்-ஆசை தூண்டிவிட்டு பேரங்கள் பேசிடுவோர்
பேராசை மாந்தரல்ல பேய்!
(9)
 
உறவுமுறை சொல்லி உருக்கமாய்ப் பேசிக்
கறப்போரின் எண்ணமெல்லாம் காசு
(10)
 
✍️செ. இராசா

27/11/2022

ஓட்டைப் புல்லாங்குழல்
நிரப்ப முடிகிறது
யாசகனின் பசி

லவ்டுடே குறள் வெண்பாக்கள்



கல்யாணம் பண்ணனும்னா கட்டாயம் மாத்துங்கோ
செல்போனைப் பாருங்கோ... சென்று!
 
யாரந்த மம்முகுட்டி? எங்கடி போனீங்க?
தூரமாய்ப் போனதேன்....த்தூ..
 
வாட்சப்பைப் பார்த்தாலே வாந்தி வருகுதடா
காட்ஸில்லாக் காமுகனா நீ?
 
நம்பிக்கை இல்லாமல் நாம்நோண்டிப் பார்த்தோம்னா
நம்வாழ்க்கை வீணாகும் நம்பு!
 
மறைப்பதால் கூட நலம்வரும் என்றால்
மறைப்பதும் தப்பில்லை நம்பு!
 
✍️செ. இராசா

  வெற்றி இலக்கடைய

 

வெற்றி இலக்கடைய
........வேகமாய்ப் போகையில்
சுற்றத்தைக் குற்றமாய்ச்
.........சொல்லாமல்- முற்றும்
பனிபோல் படர்ந்தெம்மை
........பற்றுகின்ற சோர்வே
இனிமேல்நீ வேண்டாம்
........எனக்கு!

26/11/2022

உருட்டு உருட்டு

 


உருட்டு உருட்டு உருட்டு உருட்டு உருட்டு உருட்டு
உருட்டு உருட்டு உருட்டு உருட்டு மச்சி உருட்டு
நீ.‌....உருட்டு ...நீ.....உருட்டு...நீ..‌.... உருட்டு
 
பப்பரிக்கா பப்ளிமாசு
பார்க்குறப்ப ஹையர்வாட்ஸ்..
ஷக்கலக்க பேபிபேசு
ஷாக்கடிக்கும் பார்த்துப்பேசு
 
பூஜுடிக்கா பூஜுடிக்கா பூஜுடிக்கா உள்ளாப்பா
ஓங்கிவிட்டா ஓங்கிவிட்டா உடைஞ்சிடும்பா எல்லாம்பா‌‌.....
 
 
உருட்டு உருட்டு உருட்டு உருட்டு உருட்டு உருட்டு
உருட்டு உருட்டு உருட்டு உருட்டு மச்சி உருட்டு
நீ.‌....உருட்டு ...நீ.....உருட்டு...நீ..‌.... உருட்டு
 
ஏ...ரிங்கா ரிங்கா ரோசு..
நாங்க தாண்டா மாசு
சும்மா சும்மா டான்சு
போடாதடா மாம்சு
ஏய்...
 
கொண்டா கொண்டா கொண்டா-நான்
குடிக்க வேணும் குண்டா..
சோடா கீடா தாடா- பான்
பீடா வேணாம் போடா....
 
ஐயே....தோடா...எப்பப் பாரு...
 
ஏய்... லாடு லவக்கு தாசு
....இது நைன்டி கிட்சு வேவ்சு
இங்க ரூல்ஸ் கீல்ஸ் கோட்ஸ்
....அது எல்லாம் வெத்து வேர்ட்ஸ்

சோர்வும் கவலையும்

 

சோர்வும் கவலையும்
......சூழ்கின்ற போதெல்லாம்
தீர்க்கும் மருந்தாகத்
......தேடிவரும்- ஓர்குரலாய்
ஒற்றை உறவமைந்தால்
......உண்மையில் நாம்பெற்ற
சுற்றக் கணக்கெதற்கு
......சொல்?!

23/11/2022

கேப்பக் களி கிண்டி


 

கேப்பக் களி கிண்டி
கிண்ணம்போல் குழிவெட்டி
வச்ச மீன் குழம்ப
வரம்பு மீறி ஓடவிட்டு
சூடு குறையும் முன்
சுட்டுவிரல் தொட்டெடுத்து
நாவின் மையத்தில்
நச்சென்று வக்கயில...
சொர்க்கம் என்னான்னு
சொல்லாமலே புரியுதுங்க...
 
✍️செ‌. இராசா
 
(களி காலம்😀😀😀கலி காலம் அல்ல)

உதயநிதி ஸ்டாலின் பாடல்

 

*தொகையறா*
 ************
சேப்பாக்கம் செல்லப்பிள்ளை
....செந்தமிழின் சின்னப்பிள்ளை- எங்கத்
தளபதியார் தந்தபிள்ளை-
.....தமிழகத்தார் சொந்தப்பிள்ளை- நம்ம
.....தமிழ்---அகத்தார் சொந்தப்பிள்ளை
 
(தமிழ்-அகத்தார்னா யாருண்ணே?
தமிழை உளமார நேசிக்கும் அனைவருமே தமிழ்-அகத்தார்தான் தம்பி...
ஓ..அப்படியா... செம்ம அண்ணா...
மேல பாடுங்க...)
 
*பல்லவி*
************
மக்களோட மக்களாக மாநகரத் தந்தையாக
எங்களோட நின்னது யாரு- தளபதியாய்
எங்களோட நின்னது யாரு?
கலைஞரோட வித்து- தங்கத்
தலைவர்தந்த சொத்து
தளபதியார் சிங்கம் யாருங்க- சின்னவரு
சுத்தமான தங்கம் பாருங்க
 
இதயத் தளபதி எங்கள் உதயத் தளபதி
புதிய தளபதி வந்தார் உதய நிதியினி
அழகுத் தளபதி எங்கள் அன்புத் தளபதி
கழகத் தளபதி சின்னக் கலைஞர் அவரினி
 
*சரணம்-1*
************
ஏய்...
இளைஞரோட நாயகரா..
இருக்குமெங்க சின்னவர
பலநாள் பார்த்தபின்னே- ஏய்
கழகத்தோட காவலரா..
இருக்குமிளைஞர் அணிசேர
பொறுப்பு சேர்ந்ததண்ணே...
 
முன்னவச்சக் கால பின்னவச்ச தில்ல
தலைவர்சொன்ன சொல்ல தட்டிக்கழிச்ச தில்ல
காலநேரம் ஏதுமில்லை
கடமைசெய்ய சோர்வுமில்லை- சொல்லுமுன்னே
சொல்லுமுன்னே
சொல்லுமுன்னே செய்பவரு
சொல்லாமலும் செய்பவரு
சிங்கம்போல வருவதைப்பாரு- உதய சூரியச்
சின்னம்போல எழுவதைபாரு...
 
*சரணம்-2*
************
சட்டமன்ற உறுப்பினரா
சக்கைபோடு போடுவதால்
அனைவரும் கேட்பதென்ன?- ஏய்
சகலகலா வல்லவரா
வெற்றிக்கொடி நாட்டுவதால்
அமைச்சரா ஆகனுண்னே.
 
தன்னைமுன்ன வைக்க அவரும் சொல்லவில்லை
தலைமை சொன்ன சொல்ல தாண்டிச் செல்வதில்லை
நீலவானம் சாய்வதில்லை
நிசங்களென்றும் தோற்பதில்லை- கேட்குமுன்னே
கேட்குமுன்னே
கேட்குமுன்னே கொடுப்பவரு
கேட்காமலும் கொடுப்பவரு
தங்கம்போல ஜொலிப்பதைப்பாரு-தமிழகத்தின்
அங்கமாக கலக்குற ஸ்டாரு
 
✍️செ. இராசா

ஏ...ரிங்கா ரிங்கா ரோசு

 


ஏ...ரிங்கா ரிங்கா ரோசு..
நாங்க தாண்டா மாசு
சும்மா சும்மா டான்சு
போடாதடா மாம்சு
ஏய்...
 
கொண்டா கொண்டா கொண்டா-நான்
குடிக்க வேணும் குண்டா..
சோடா கீடா தாடா- பான்
பீடா வேணாம் போடா....
 
ஐயே....தோடா...எப்பப் பாரு...
 
ஏய்... லாடு லவக்கு தாசு
....இது நைன்டி கிட்சு வேவ்சு
இங்க ரூல்ஸ் கீல்ஸ் கோட்ஸ்
....அது எல்லாம் வெத்து வேர்ட்ஸ்

21/11/2022

போற்றுவார் போற்றட்டும்

 


போற்றுவார் போற்றட்டும்
.........பொய்யாய்ப் புழுதியள்ளித்
தூற்றுவார் தூற்றட்டும்
.........சோர்ந்திடாதே! - காற்றடிக்கும்
காலம்நம் காலமெனில்
.........கைகொடுக்க வந்திடுவர்
ஞாலத்தின் போக்கிதுவே
.........நம்பு!

ஔவைத் திங்கள் - 17 -------- பசி கொடியது

 


பசியில்லை என்றால் பணியென்ன வேறு?
பசியால்தான் தேடும் பொழப்பு!
(1)
 
பசிப்பிணி போக்கும் பலபேர்கள் ஒன்றாய்
வசிப்பதால் தானிங்கே வாழ்வு
(2)
 
உணவின்றிப் போனால் உலகென்ன ஆகும்?
பிணம்கூடிப் போகும் பின்பு
(3)
 
பசியின் கொடுமையைப் பார்த்துணரா பேர்கள்
புசிக்காமல் கொட்டிடுவர் போய்
(4)
 
இருப்பதில் கொஞ்சமாய் ஏழைக்குத் தந்து
வரும்பசி போக்கிட வா!
(5)
 
இல்லார் பசியை இருப்போர் உணர்வதற்காய்
இல்லாமல் ஓர்நாள் இரு
(6)
 
நல்லவராய் வாழ்பவரின் நற்குணங்கள் போவதற்காய்ப்
பல்துயர் செய்யும் பசி
(7)
 
வறுமையின் உச்சத்தில் வாடுகின்ற போதும்
பொறுப்போர்க்கேக் கிட்டும் புகழ்
(8)
 
ஈவோரைத் தேடி இரந்துபோய் உண்ணாமல்
சாவோரும் உள்ளார் தனித்து
(9)
 
கிட்டங்கில் சேர்த்ததெல்லாம் கிட்டாமல் வீணானால்
நட்டமிங்கு யார்க்கு நவில்?
(10)
 
✍️செ. இராசா

20/11/2022

வள்ளுவரே வள்ளுவரே

 


வள்ளுவரே வள்ளுவரே
....வானுயர்ந்த வள்ளுவரே
வள்ளுவத்தைத் தந்தெம்மை
....வாழவைத்த- வள்ளுவரே
இக்கரையில் குந்திடவா
....ஈரடிப்பா நான்பயின்றேன்
அக்கரையைப் பற்றிடுவேன்
....‌‌ஆய்ந்து

மௌனம்

 


மகர ஒற்றில்
'ம்' என்றிருப்பதல்ல மௌனம்..
மன ஓட்டத்திலும்
'ம்' என்றிருப்பதே இருப்பதே மௌனம் ‌
 
ஒலி இல்லா இசையாய்
மொழி இல்லாக் கவியாய்
அலை இல்லாக் கடலாய்
அசைவில்லா இயக்கமாய்
அப்படியே இருப்பதே மௌனம் 
 
ஊடலில் மௌனமென்றால் அங்கே கூடல்
கூடலில் மௌனமென்றால் அங்கே கூட்டல்\
 
மௌனம் உடைந்தால் அது பிறப்பு; உயிர்
மௌனம் அடைந்தால் அது இறப்பு
 
காந்தியின் மௌனம்
கூர்தல் ஆயுதம்...
காந்தி நோட்டின் மௌனம்
தேர்தல் ஆயுதம் ...
ரமணரின் மௌனம் ஞானம்
பாரதியின் மௌனம் ரௌத்திரம்
மேஸ்ட்ரோவின் மௌனம் கானம்
கேஸ்ட்ரோவின் மௌனம் தேசம்
 
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்..
 
வேகாதபோது வருகின்ற சப்தம்
வெந்தபின் வருவதில்லை...
கரையோரம் வருகின்ற சப்தம்
ஆழத்தில் வருவதில்லை..
 
மௌனமே தவம்
மௌனமே சுகம்
மௌனமே பலம்
மௌனமே நலம்
 
✍️செ. இராசா

19/11/2022

தந்தையாய் அண்ணனாய்

 

தந்தையாய் அண்ணனாய்
......தம்பியாய் அத்தானாய்
மைந்தனாய்ப் பேரனாய்
.......நண்பனாய்- வந்துதவும்
அத்தனை ஆண்களையும்
.......அன்போடு கொண்டாட
எத்தனை பேர்களுண்(டு)
........இன்று?!
 
அனைவருக்கும் இனிய ஆண்கள் தின வாழ்த்துகள்

18/11/2022

லவ்டுடே தாக்கத்தில் உருவான பாடல்

 (லவ்டுடே தாக்கத்தில் உருவான பாடல்)

ஏன்டீ... இப்படிப் பண்ணுற
ஏன்டி இப்படிப் பண்ணுற
ஏன்டா இப்படிக் கத்துற
எதுக்கு இப்படிக் கத்துற

#ஆண்:
லவ்வு டுடே படத்தைப் பார்த்துப் போன மாத்தச் சொல்லுற
லவ்வர் பாயா நடப்பது போல் ரொம்ப சீனு போடுற...

#பெண்
சத்தியமா நல்லவன்னா ஏன்டா நீயும் பதறுற
உத்தமனா உள்ளவன்னா சும்மா ஏன்டா உளறுற

(ஏன்டீ)

#ஆண்
தகடுதகடு வில்லங்கத்தை அவனும் படமா எடுக்குறான்...
குலுங்கி சிரிச்ச குடும்பத்துல கொலுத்திப் போட்டு சிரிக்கிறான்..

#பெண்
இருக்குறதத் தானே இங்கே திரையில் அவன் எடுக்குறான்...
உறுத்துவதால் தானே இங்கே சிரிச்சு விசில அடிக்கிறான்...

(ஏன்டீ)

17/11/2022

பாடல்: #ஹரிவராசனம்_விஸ்வமோகனம் (அதே மெட்டில்)

 


 பாடல்: #ஹரிவராசனம்_விஸ்வமோகனம்

(அதே மெட்டில் முடிந்தவரை தமிழில் மொழி பெயர்த்து எழுதியுள்ளேன்)

அரியணைமேலே அமர்ந்தருள்தரவே
அரிதப்பரியிலே உலவிடும் குருவே
எதிரிநடுங்கவே நடனம் புரியவே
அரிஅரமகனே அடைகிறோம் சரணே

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

சரணகோசமே மகிழ்வின்வாசமே
அகிலமியங்கவே அணுவிலாடவே
ஆதவனொளியே ஐம்பதிவரவே
அரிஅரமகனே அடைகிறோம் சரணே

மெய்ப்பொருளுருவே உயிர்களின்திருவே
வருபவர்வரவே தருகிறதருவே
ஓமெனும் வடிவே ஒலிக்கிறஇசையே
அரிஅரமகனே அடைகிறோம் சரணே

அகிலஉலகமே ஆள்கிற இறையே
அரனின்விழியிலே ஐயனின்ஒளியே
குருவெனவரவே கொடைதருமருளே
அரிஅரமகனே அடைகிறோம் சரணே

பயபாவம்களைந்தே காக்கிறவுறவே
புவனமுணரவே பூசிடும்நீறே
வாரணமதிலே வருகிறமதியே
அரிஅரமகனே அடைகிறோம் சரணே

முருகனின் அழகே முறுவலின் எழிலே
இளமையின் இருப்பே இனிமையின் ருசியே
அரிபரிகளிறே அமர்கிறசபையே
அரிஅரமகனே அடைகிறோம் சரணே

அடிகள்நேசனே அருளும்ஈசனே
மறைகள்வாசனே தாசர்தாசனே
கோச நேசனே ராக ராஜனே
அரிஅரமகனே அடைகிறோம் சரணே

--செ. இராசமாணிக்கம்

இப்படித்தான் ஆகுமென்று

 


இப்படித்தான் ஆகுமென்று
......யாமறிவோம் என்பவர்கள்
இப்படித்தான் சொல்லிடுவர்
......எப்போதும்- அப்படியே
இப்படித்தான் என்றுணர்ந்தால்
......ஏனன்று சொல்லவில்லை
இப்படித்தான் ஆகுமென
......இன்று!

16/11/2022

சூரியன்

 #சூரியன்

திடீர் வெடிப்பில் சிதறி
கோள்களோடு குடும்பமாகி
பால் வீதியில் குடியேறி
பேரண்டத்தில் சுற்ற வேண்டி
வளியூரில் வழியமைத்த
ஒளிவெள்ளச் சூரியனை
எண்ணியெண்ணிப் பார்க்கின்றேன்..
எண்ணமெல்லாம் போற்றுகின்றேன்...

ஒன்றைச் சொல்லுங்கள்...

சூரியன் மட்டும் இல்லையென்றால்
பூமிப் பாத்திரத்தில்
கடலை யார் காய்ச்சமுடியும்?
ஆவி சூத்திரத்தில்
புனலை யார் பாய்ச்சமுடியும்?

சூரியகுலத் தென்றல் இராமனாம்...
சூரியவழித் தோன்றல் கர்ணனாம்...
இங்கே...
சூரியனை மையமாக வைத்துதான் எல்லாம்..
இந்த மையத்தைச் சொன்னவர் கலிலியோ
அவரைச் சொல்லவா விட்டார்கள்?!

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்!

சூரியன் மட்டும் இல்லையென்றால்
சுற்றிடும் கோள்கள் இல்லை
சுற்றிலும் விடியல் இல்லை
என்னது விடியலா?
அட...
இதுஅரசியல் இல்லை
அறிவியல்!

இருளில்லா சூரியன்தான்
இருளைக் கிழிக்கிறது!
நீரில்லா சூரியன்தான்
நீரை அளிக்கிறது!
தூரத்து சூரியன்தான்
துணைக்கு வருகிறது!
ஞாலத்து சூரியன்தான்
ஞானம் தருகிறது!

எனில்...
எரியட்டும் சூரியன்‌‌!
தெரியட்டும் பாதை!
தெளியட்டும் போதை‌‌!
போகட்டும் வாதை!

✍️செ. இராசா

14/11/2022

நாலாயிரம் கோடிகொண்ட பேக்கேஜுங்கோ

 


நாலாயிரம் கோடிகொண்ட பேக்கேஜுங்கோ
நாலுமழை தாங்கலையே என்னாச்சுங்கோ?
ஆட்சிமாறி ஆட்சிமாறி கோலோச்சிங்கோ
காட்சிமட்டும் மாறலையே ஏன்சொல்லுங்கோ?
 
ஹலோ டியர் மாமி- நீர்
போற வழி காமி...
 
ஐயாம் வெரி சாரி- நீங்க
வாழும் இடம் ஏரி...
 
✍️செ.‌இராசா

என் கேள்விக்கான பதிலை மிகவும் விரிவாகவே திரு. ஜெயமோகன் ஐயா வழங்கியுள்ளார்கள்

  


[என் கேள்விக்கான பதிலை மிகவும் விரிவாகவே திரு. ஜெயமோகன் ஐயா வழங்கியுள்ளார்கள்]

அன்புள்ள இராசமாணிக்கம்,

மிக விரிவாகவே இதற்கு பதில் சொல்லவேண்டும். ஏற்கனவே நிறையவே சொல்லிவிட்டேன். அவை நூலாகவும் வெளிவந்துள்ளன. எளிதில் வாங்கி வாசிக்க முடியும்.

ஏற்கனவே சொன்னவற்றை மீண்டும் சுருக்கமாக சொல்கிறேன். ஏன், எவ்வாறு என்னும் ஐயமிருந்தால் நூலையே வாசிக்கவும்.

சாதி பற்றி நமக்கு சில பொதுவான புரிதல்கள் தேவை.

அ. சாதி எவராலும் உருவாக்கப்பட்டது அல்ல. அது சமூகம் உருவாகி வந்த பரிணாம வளர்ச்சியில் உருவான ஓர் அமைப்பு.

ஆ. பிறப்பு அடிப்படையில் மக்களை பிரித்து, மேல்கீழாக அடுக்கும் போக்கு என்பது நிலவுடைமைச் சமூகத்தின் இயல்பு. அச்சமூகத்தின் உற்பத்திமுறைக்கு அவசியமானதாக இருந்தது. அந்த போக்கு இல்லாத சமூகமே உலகிலெங்கும் இல்லை. ஆகவே சாதிபோன்ற அமைப்பு எல்லா நாட்டிலும் இருந்தது. வேறுவகைகளில் நீடிக்கிறது.

இ. சாதிகள் என்பவை பழங்குடிகளின் இனக்குழுக்களாக இருந்தவை. பழங்குடிக்குழுக்கள் சமூகமாக இணைந்தபோது அச்சமூகத்திற்குள் இனக்குழுக்கள் சாதிகளாயின. வென்றசாதி மேல், சிறிய சாதிகள் கீழ் என ஆகியது.

இ. இந்திய சாதியமைப்பு எப்போதுமே மாறாததாக இருந்ததில்லை. அடித்தளச் சாதிகள் மேலெழுந்து ஆட்சியமைத்து அரசகுடிகள் ஆகியுள்ளன. ஆண்ட சாதிகள் அடிமைப்பட்டு கீழ்சாதிகளும் ஆகியுள்ளன.

*

இவற்றின் அடிப்படையில் உங்கள் கேள்விகளுக்கான விடை.

இந்தியாவிற்கு பிரிட்டிஷார் வந்தபோது இங்குள்ள சாதியமைப்பைப் புரிந்துகொள்ள முயன்றனர். நிர்வாகத்திற்கு அது தேவையாகியது. தொடக்ககாலத்தில் சாதிமுறை பற்றி ஐரோப்பிய மதப்பரப்புநர்கள் ஆராய்ந்து முதற்கட்ட பதிவுகளை உருவாக்கினர். அதன்பின் பிரிட்டிஷ் ஆட்சியர்கள் மானுவல்கள் எனப்படும் நிர்வாகக்குறிப்புகளை எழுதியபோது சாதிகளைப் பதிவுசெய்தனர்.

ஜே.ஹெச்.நெல்சன் எழுதிய மதுரா கண்ட்ரி மானுவல் ஓர் உதாரணம். (இணையத்தில் மின்னூலாகக் கிடைக்கிறது) அதில் சாதிகளைப் பற்றிய விரிவான குறிப்பை அளித்துள்ளார். ஆனால் அவர் சாதிகளையும் அவற்றின் உட்பிரிவுகளையும் அவற்றின் இயல்புகளையும் பற்றி பிரிட்டிஷ் அரசில் பணியாற்றியவர்களிடம் விசாரித்து எழுதியவைதான் அவை.

அதன்பின் சமூகவியல் ஆய்வாளர்கள் சாதிகளைப் பற்றி பதிவுசெய்தனர். எட்கார் தர்ஸ்டன் விரிவாக தென்னகச் சாதிகளை பற்றி பதிவுசெய்தார். அவருடைய ஏழு பகுதிகள் கொண்ட மாபெரும் நூலான Castes and Tribes of Southern India ஒரு மிகப்பெரிய ஆவணத்தொகுப்பு. (கே.ரங்காச்சாரியுடன் இணைந்து எழுதியது) 1909 ல் இந்நூல் வெளிவந்தது. இன்றுவரைக்கும்கூட இந்நூல் ஒரு உசாத்துணை நூலாக உள்ளது. இணையத்தில் மின்னூலாகக் கிடைக்கிறது.

அதன்பின் இந்தியாவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை பிரிட்டிஷார் நடத்தினர் 1881 ல் இந்தியாவில் முதல் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடந்தது. அதில்தான் இன்ன சாதி இன்ன வகையானது, இன்ன சாதி இன்னசாதிக்கு கீழானது என்பது உறுதியாகப் பதிவுசெய்யப்பட்டது. அதற்கு முன் ஒரு சாதி இன்னொரு ஊருக்குச் சென்று இன்னொரு தொழில் செய்தால் அதன் நிலை மாறிவிட வாய்ப்பிருந்தது. ஏராளமான தரவுகள் உள்ளன.

உதாரணமாக, சோழ அரசு வீழ்ச்சியடைந்தபோது போர்ச்சாதிகள் சேரநாட்டுக்கு குடிபெயர்ந்து நெசவுத் தொழில் செய்தனர். அவர்கள் கைக்கோளமுதலியார் என அறியப்பட்டனர். இதை அ.கா.பெருமாள் பதிவுசெய்துள்ளார். இப்படி பல சாதிகளின் இடம் மாறியுள்ளது. பிரிட்டிஷ் கணக்கெடுப்புக்கு பின் அது இயலாதது ஆகியது.

பிரிட்டிஷ் கணக்கெடுப்பில் ஒவ்வொரு சாதியும் தங்கள் இடம் என்ன, இயல்பு என்ன என அவர்களே கூறியதன் அடிப்படையில்தான் பதிவுசெய்யப்பட்டது. 1911 ல் நடந்த கணக்கெடுப்பில் இந்தியா முழுக்க பல சாதிகள் இணைந்து ஒரே பெயரை பதிவுசெய்துகொண்டன. ஒரேபெயரில் சாதியை பதிவுசெய்யவேண்டும் என அறிவிப்புகள் வெளியிடப்பட்ட்ன. ஏன் என்றால் அப்போது ஜனநாயகத்தில் என்ணிக்கையின் பலம் என்ன என தெரிய ஆரம்பித்திருந்தது .அப்படி ஒன்று திரள்வது அதிகாரம் அடைய உதவியது.

அப்படி ஒரு சாதி தன்னை ஒருவகையில் குறிப்பிட்டபோது மற்ற சாதிகள் அதை எதிர்த்தன. இன்றைக்கும்க்கூட தேவேந்திரகுல வேளாளர் அவ்வாறு தங்களைச் சொல்லிக்கொள்வதை மற்ற வேளாளர்கள் எதிர்க்கிறார்கள் அல்லவா அதைப்போல.சில சாதிகள் தங்களை ஷத்ரியர் என சொல்லிக்கொண்டபோது மற்ற சாதிகள் எதிர்த்தன. இந்தப்பூசல் பல ஆண்டுக்காலம் நடைபெற்றது.

ஆங்கில ஆட்சியாளர்கள் அவர்கள் எடுத்த மூன்று மக்கள்தொகை கணக்கெடுப்பின் வழியாக திரட்டிய செய்திகளைக் கொண்டு சாதிகளின் இயல்பையும் இடத்தையும் முடிவுசெய்தனர். சாதிகளின் சமூக இடம், பொருளாதாரம் ஆகியவை அதற்கு கருத்தில்கொள்ளப்பட்டன. சாதிகளின் கோரிக்கையும் கருத்தில்கொள்ளப்பட்டது. தொடக்கத்தில் எல்லா சாதியும் தங்களை உயர்சாதி என்று சொல்ல விரும்பின. 1921 ல் சாதிவாரி இட ஒதுக்கீடு வர ஆரம்பித்த பிறகு எல்லா சாதிகளும் தங்களை பிற்பட்ட சாதி என சொல்ல விரும்பின.

இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு பல சாதிகள் பிற்பட்ட சாதிகளாக அறிவிக்கப்பட்டன. அது இடஒதுக்கீட்டை அடைவதற்காக அரசியல் வழியாக பெற்ற அடையாளம். தேவேந்திரகுல வேளாளர் இன்று தங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம், தாங்கள் தாழ்த்தப்பட்டோர் அல்ல என்கிறார்கள். எப்படியும் இருபதாண்டுகளில் அவர்கள் அந்த அடையாளத்தை விட்டு வெளியேறிவிடுவார்கள்.

இப்படித்தான் சாதிகளின் அடையாளங்கள் சென்ற இருநூறாண்டுகளாக பதிவுசெய்யப்பட்டு வரைமுறைப்படுத்தப்பட்டன

*

சாதிகள் இன்று இந்தியாவில் முன்பு போல இறுக்கமான சமூகக் கட்டுமானங்கள் அல்ல. ஆனால் அவை கூட்டு அடையாளங்களாக ஆகியிருக்கின்றன. மக்கள் தங்களை பெரிய சமூகக்குழுக்களாக திரட்டிக்கொள்ளவும், அரசியல் அதிகாரத்தையும் பொருளியல் அதிகாரத்தையும் அடையவும் அவை உதவுகின்றன. சாதியின் சமூகம் சார்ந்த இறுக்கம் போய்விட்டது. ஆனால் சாதியின் அரசியல் முக்கியத்துவம் வலுவாகி வருகிறது.

ஜனநாயகத்தில் மக்கள் எப்படியாவது தங்களை திரட்டிக்கொண்டு அதிகாரத்தை அடையமுற்படுவதே இயல்பாக நிகழ்கிறது. தொழிற்சங்கம் என்பது அப்படிப்பட்ட ஒரு திரட்டு. அதேபோல ஒன்றாக சாதியும் ஆகிவிட்டிருக்கிறது. நம்மைவிட ஜனநாயகம் மேலோங்கிய அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும்கூட மக்கள் இப்படி பிறப்பு சார்ந்த, பொருளாதாரம் சார்ந்த பல குழுக்களாக திரண்டுதான் அதிகார அரசியலில் ஈடுபடுகிறார்கள்.

இது சரியா தவறா என நாம் சொல்ல முடியாது. வரலாறு இப்படி நிகழ்கிறது என்று மட்டுமே சொல்லமுடியும். ஜனநாயகம் என்பதே அதிகாரப்போட்டிதான் எனும்போது அது சரியும்கூட. சாதிகளுக்குள் மோதல்கள் நிகழாதவரை, சாதிகளின் அடிப்படையில் மனிதர்கள் ஒருவரை ஒருவர் அவமதிக்காதவரை வேறுவழியில்லை என கொள்ளவேண்டியதுதான்.

ஜெ

எனது கேள்வி:
https://m.facebook.com/story.php?story_fbid=6106014916089978&id=100000445910230&sfnsn=mo&extid=a

See less

ஔவைத் திங்கள்-16 ---- இயல்பில் திரியாமை

 


 #ஔவைத்_திங்கள்__16
#இயல்பில்_திரியாமை

இயல்பில் திரியாமல் எப்போதும் நின்றால்
இயற்கையே கைகொடுக்கும் ஏறு!
(1)

பட்டென்று கொத்துகின்ற பாம்பின் குணமுள்ளோர்
சட்டென்று கொத்திடுவர் சாய்ந்து!
(2)

நாயைக் குளிப்பாட்டி நல்லுணவு போட்டாலும்
வாயைத் திமிறிவரும் நாக்கு!
(3)

குணங்கெட்ட சாத்தான்கள் குன்றேறும் என்றால்
கணங்கூட நிற்பதில்லைக் காண்!
(4)

கெடுகின்ற பாலில் கெடாதநெய் போல்தான்
கெடுதலிலும் நன்றுண்டு கேள்!
(5)

நட்பின் அளவுகோல் நாட்கள் பொறுத்தில்லை
நட்பின் நடப்பில்தான் நட்பு!
(6)

செய்ததை எல்லாம் சிறிதும் நினையாமல்
செய்ததென்ன என்பர் சிலர்?
(7)

பணம்வந்த பின்னே பழகிய நட்பின்
குணம்மாறும் என்றால் குறை!
(8.)

பாலைத் திரிக்கும் பழச்சாறின் ஓர்துளிபோல்
காலைக் கவிழ்த்துவிடும் காழ்ப்பு!
(9)

நல்ல குணவானும் நாட்களின் ஓட்டத்தில்
பொல்லானாய் மாறலாம் போக்கு!
(10)

✍️செ. இராசா

13/11/2022

"நான்-ஈ"யின் நாயகன் யார் ஈயே

 

 


ஊர்விட்டு ஊர்போகும் ஈயே- இனி
யார்வீட்டைப் போய்ச்சேர்வாய் நீயே..
கார்பற்றிக் கால்வைத்த ஈயே- இனி
யார்பற்றிப் பின்செல்வாய் நீயே...

இடம்விட்டு இடம்மாறும் ஈயே- என்
இடர்போல இடர்கொண்டாய் நீயே..
உடன்பற்றி உலவுகின்ற ஈயே- நீ
தடம்மாற காரணம்யார் நீயே...

தேன்-ஈ யின் மரபணி யார் ஈயே- பின்
வீண் ஈ யாய் போனதும் யார் நீயே.
"நான்-ஈ"யின் நாயகன் யார் ஈயே- அட
"நான்"கூட நாயகன் முன் நீயே...

✍️செ.இராசா

பனங்கற்கண்டு



எத்தனையோ பனையிலேறி
.....இறக்குகின்ற கள்ளினை
மொத்தமாக ஊற்றிவிட்டு
.....மூட்டவேண்டும் தீயினை
அத்தனையும் சுண்டிவந்தால்
....ஆகிவரும் பாகினை
பத்திரமாய் நூல்களிட்ட
......பாத்திரத்தில் ஊற்றியே..

நாலுபத்து நாலிரண்டு
....நாட்களான பின்னராய்
நூலுபற்றித் தொங்கியங்கே
.....முத்துமுத்தாய் மாறுமே
நூலையத்து நீரைவிட்டு
.....நுட்பமாக முக்கவே
பாலையொத்த கற்கண்டை
.....பார்க்கலாமே நீங்களே...

(45 க்கும் மேற்பட்ட பனைமரங்கள் ஏறி இறக்கும் 200 லிட்டர் கள்ளைக் கொதிக்க வைத்து, அதை நூல்கள் கட்டிய பெட்டியில் ஊற்றி 48 நாட்கள் காத்திருந்தால் வெறும் 5 கிலோ அளவிலான கற்கண்டே கிடைக்குமாம். அப்படிக் கிடைக்கும் கற்கண்டின் மகத்துவமோ அளவிட முடியாதது. ஆனால், பனைமரத் தொழிலாளர்களின் வாழ்வியலில்தான் இன்னும் ஏற்றம் வரவில்லை என்பது வேதனையான உண்மையே)


12/11/2022

புதிய மனிதர்கள்



கத்தாரில் என் அலுவலகத்தில் இருந்து வெறும் 200 மீட்டர் தொலைவில்தான் கடற்கரை உள்ளது. எங்கள் அலுவலக நேரமென்பது காலை 6:30 மணிக்கெல்லாம் துவங்கிவிடும் என்பதாலும் சீக்கிரம் வந்தால்தான் வாகனத்தை நிறுத்த இடம் கிடைக்கும் என்பதாலும் அனைவரும் சற்று சீக்கிரமே வந்துவிடுவோம். இதில் நான் அதிலும் சற்று முன்பாக 6:00 மணிக்கெல்லாம் வந்துவிடுவேன்‌. காரணம், நான் என் இரண்டாம் தாய்போல் நினைக்கும் அந்தக் கடல் அன்னையிடம் போய், அந்நீரைத் தொட்டு இரண்டு கண்களிலும் ஒற்றியெடுத்துத் தலையின் உச்சியில் தடவும் பழக்கமுள்ளவன் என்பதால். அப்படித் தொடும்போது, அந்தப் பிரபஞ்சத்தின் துளியை நேரடியாகவே தொடுவது போன்ற ஓர் உணர்வு என்னுள் ஏற்படுவதுண்டு.

தற்சமயம் உலகக்கோப்பைக் கால்பந்தாட ஆரம்ப நிகழ்வுகள் நடைபெறுவதால், ஏழு கிலோமீட்டர் நீளமுள்ள கார்னீஷ் கடற்கரையில் நடக்க மட்டுமே அனுமதியுள்ளது. நிறைய காவல்துறையினர் அங்கே நிற்பதால் ஏகப்பட்ட கெடுபிடி. இருப்பினும், நான் வழக்கம்போலவே இன்றும் கடற்கரை போயிருந்தேன். படித்துறையில் நீரைத் தொட்டு வணங்கி விட்டுத் திரும்பினால், என்னைப்போலவே ஒரு கருகரு நிறத்தில்...இல்லை இல்லை... சற்றே கூடுதலான கருநிறத்தில் ஒரு இளைஞர் என் அருகிலே அமர்ந்து அந்தத் தண்ணீரை எடுத்துக் குடித்துக்கொண்டிருந்தார். எனக்கோ ஆச்சரியம்.... மீண்டும் எடுத்து குடித்தார். நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். நான் பார்ப்பதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு, அவராகவே அதற்கான விளக்கத்தைக் கூறினார். அதாவது, காலையில் வெறும் வயிற்றில் கடல்நீரை அருந்தினால் நல்லதாம். அது மருந்துபோல செயல்படுமென்றார். (மனிதர்களுக்குள்தான் எத்தனை எத்தனை நம்பிக்கைகள்)

அவரின் ஊரை விசாரித்தபோது கென்யா என்றார். அவர் வந்து ஒரு வருடம்தான் ஆகிறதாம். பிறகு கால்பந்து விளையாட்டு பற்றி பேசினோம். அவர்கள் நாட்டணி விளையாடத் தகுதி பெறவில்லையாம். நம்ம அணியும் தான். ஆனால் நம்ம ஊர் கிரிக்கெட் அணியை, முதல்தரமான அணியென்று மிகவும் புகழ்ந்தார் (நம்ம வாங்குன அடியை இவர் பார்க்கலைபோல).

அடுத்து நான் கத்தார் வந்த வருடத்தைக் கேட்டார். 2006 என்றேன். அப்போது தனக்கு 7 வயதென்றும், தற்போது 22 வயதென்றும் கூறினார். என் வயதைக்கேட்டார். நான் 42 என்றேன். என் தந்தையாரின் வயதென்றார் (உண்மையில் என் தந்தைக்கும் இதே வயது ஆகும்போது, நான் பொறியியல் படித்து முடிந்துவிட்டேன்) ஆகா.....சரி என் வயது என்ன இருக்குமென்றேன். ஒரு 30, 33 போல உள்ளதென்றார். உடனே மிகவும் மகிழ்ச்சியோடு அந்தக் கென்யத் தம்பியிடம் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். பிறகு இருவரும் அவரவர் பணியை நோக்கி விடைபெற்றுக்கொண்டோம்.

உண்மையில் இப்படிப் புதிய புதிய மனிதர்களைச் சந்திக்கும்போதுதான் எத்தனை எத்தனை மகிழ்ச்சி கிடைக்கிறது.

நன்றி இறைவா...💐💐💐

11/11/2022

தமிழ்ச்சோலை தந்த -பிறந்தநாள் வாழ்த்துகள்

 

தமிழ்ச்சோலை தந்தநல் தம்பியிந்தத் தம்பி
அமிர்தம்போல் அன்பை அளிக்கின்ற தம்பி
உடன்பாட்டில் செய்யும் உடன்பிறவா தம்பி
உடன்நின்று தூணாய் உயர்த்திவிடும் தம்பி
கொடைக்கானல் தந்த குணமுள்ள தம்பி
விடைத்தாளாய் நிற்கும் வியப்பான தம்பி
வள்ளுவரைப் போற்றும் வடிவான தம்பி
தெள்ளுதமிழ் போலே தெளிவான தம்பி
அண்ணனென ஏற்ற அன்பான தம்பி
வண்ணமுற வாழயெம் வாழ்த்து!
 
✍️செ. இராசா
 
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்  தம்பி
 

அண்ணனும் தங்கையும்


 
அண்ணனும் தங்கையும் அப்படிக் கொஞ்சினர்
கண்டவர் யாவரும் காவியம் என்றனர்
நாட்களும் ஓடிட நாயென மாறியே
வீட்டினை மாற்றினர் வேறு!
 
 
😀😀😀😀😀😀😀
படம் 2015

10/11/2022

அம்மன்பட்டி பேரைக்கேட்டா

  •  

     
    #பல்லவி

    அம்மன்பட்டி பேரைக்கேட்டா
    ..........பட்டிதொட்டி படபடக்கும்
    மஞ்சுவிரட்டு பந்தையம் பார்க்க
    .........மக்கள்வெள்ளம் படையெடுக்கும்
    அரசமரம் ஊரணிங்க
    அதனருகே கோவிலுங்க

    அனைவருமே கூடிநிற்போம்
    அதுதானே சமத்துவங்க‌‌...
    அருகருகே உறவாநிற்போம்
    அதுதானே மகத்துவங்க..

    அம்மன்பட்டி பேரைக்கேட்டா....

    #சரணம்_1

    எங்க ஊரில் பொங்கல் விழா
    என்றுமிங்கே சிறப்புங்க....
    எங்கோ எங்கோ உள்ளவுங்க
    அந்தநாளில் வருவாங்க...‌
    கண்ணன் கோவில் முன்னால
    பொங்கல் வச்சா தானுங்க
    சொந்த பந்தம் எல்லாமும்
    பொங்கல் வைக்கும் பாருங்க
    அடுத்த நாளில் மாட்டுப் பொங்கல்
    அதுவுமிங்க சிறப்புங்க..
    தொழுவில் மாட்டை அடைச்சு வச்சு
    துறந்துவிடுவோம் பாருங்க...
    புடிச்சா நீயும் புடிச்சுப்பாரு
    புடிக்கும் முன்னே நினைச்சுப்பாரு...
    அம்மன்பட்டி ஆளைப்போல
    அடங்கிடாது காளையிங்க...

    #சரணம்_2

    வெள்ளி நாயகன் கூலு சுரேஷ்
    எங்களோட ஆளுங்க....
    காடுவெட்டி ராசா அண்ணன்
    அவரும்பிறந்த ஊருங்க...
    சாதி பேதம் ஏதும் இங்கே
    சத்தியமா இல்லீங்க
    ஏதிலாரும் இங்கே வந்தா
    ஏற்குமெங்க ஊருங்க...
    அல்லாஹ் அக்பர் என்றே சொல்லும்
    பாங்கின் ஓசை கேட்குங்க..
    சாமி சரணம் சாமியே சரணம்
    அதுவும் இங்கே கேட்குமுங்க...
    மாவீரர் குழுமம் பேரில்
    மாநாடே நடக்குதுங்க...
    போர்வீரர் எல்லாம் இங்கே
    போரடிச்சுக் கிடக்குதுங்க...

    ✍️செ. இராசா

பாய்கின்ற நேரத்தில்

 


பாய்கின்ற நேரத்தில்
........பாய்ந்தோடிச் சென்றால்தான்
வாய்மூடி கைபொத்தி
........வந்தவழி- போய்விடுவர்
பாய்கின்றன நேரத்தில்
........பாயாமல் நின்றுவிட்டால்
நாய்பொழப்பே நம்பொழப்பு
.......நம்பு!

முறுக்கு மீசைக் காரா

 

முறுக்கு மீசைக் காரா- உன்
முடிவை சொல்லிப் போடா..
நறுக்குத் தெறிக்க நீயும்- நல்ல
நாளைக் குறிக்க வாடா..
 
முட்டை முழியக்காட்டி- எனை
முடிஞ்சு வச்ச சகியே...
பந்தல் கொடியநாட்டி- நான்
பந்தி வைப்பேன் முறையே...
 
நீ என்னத்த சொன்னாலும்
அதை உன்-அத்தை கேட்கலையே
 
நம் எண்ணத்த மெய்யாக்க
நீ கன்னத்தைக் காட்டடியே..
 
ஏய்....சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலு- நான்
சீக்கிரம் வருகிற மெய்லு...
நீ....சூப்பரு டூப்பரு ஃபிகரு- உனைத்
தொட்டதும் உயருது சுகரு..
 
ஏய்...இடக்கர டக்கலு ஸ்டைலு- ஏன்
இடையில வருகுது சொல்லு?
நீ......சட்டுனு சடக்குனு நில்லு- சுய
சரிதையில் பகுதியை மெல்லு!
 
✍️செ. இராசா