அம்மன்பட்டி பேரைக்கேட்டா
#பல்லவி
அம்மன்பட்டி பேரைக்கேட்டா
..........பட்டிதொட்டி படபடக்கும்
மஞ்சுவிரட்டு பந்தையம் பார்க்க
.........மக்கள்வெள்ளம் படையெடுக்கும்
அரசமரம் ஊரணிங்க
அதனருகே கோவிலுங்க
அனைவருமே கூடிநிற்போம்
அதுதானே சமத்துவங்க...
அருகருகே உறவாநிற்போம்
அதுதானே மகத்துவங்க..
அம்மன்பட்டி பேரைக்கேட்டா....
#சரணம்_1
எங்க ஊரில் பொங்கல் விழா
என்றுமிங்கே சிறப்புங்க....
எங்கோ எங்கோ உள்ளவுங்க
அந்தநாளில் வருவாங்க...
கண்ணன் கோவில் முன்னால
பொங்கல் வச்சா தானுங்க
சொந்த பந்தம் எல்லாமும்
பொங்கல் வைக்கும் பாருங்க
அடுத்த நாளில் மாட்டுப் பொங்கல்
அதுவுமிங்க சிறப்புங்க..
தொழுவில் மாட்டை அடைச்சு வச்சு
துறந்துவிடுவோம் பாருங்க...
புடிச்சா நீயும் புடிச்சுப்பாரு
புடிக்கும் முன்னே நினைச்சுப்பாரு...
அம்மன்பட்டி ஆளைப்போல
அடங்கிடாது காளையிங்க...
#சரணம்_2
வெள்ளி நாயகன் கூலு சுரேஷ்
எங்களோட ஆளுங்க....
காடுவெட்டி ராசா அண்ணன்
அவரும்பிறந்த ஊருங்க...
சாதி பேதம் ஏதும் இங்கே
சத்தியமா இல்லீங்க
ஏதிலாரும் இங்கே வந்தா
ஏற்குமெங்க ஊருங்க...
அல்லாஹ் அக்பர் என்றே சொல்லும்
பாங்கின் ஓசை கேட்குங்க..
சாமி சரணம் சாமியே சரணம்
அதுவும் இங்கே கேட்குமுங்க...
மாவீரர் குழுமம் பேரில்
மாநாடே நடக்குதுங்க...
போர்வீரர் எல்லாம் இங்கே
போரடிச்சுக் கிடக்குதுங்க...
செ. இராசா
No comments:
Post a Comment