பசியில்லை என்றால் பணியென்ன வேறு?
பசியால்தான் தேடும் பொழப்பு!
(1)
உணவின்றிப் போனால் உலகென்ன ஆகும்?
பிணம்கூடிப் போகும் பின்பு
(3)
பசியின் கொடுமையைப் பார்த்துணரா பேர்கள்
புசிக்காமல் கொட்டிடுவர் போய்
(4)
இருப்பதில் கொஞ்சமாய் ஏழைக்குத் தந்து
வரும்பசி போக்கிட வா!
(5)
இல்லார் பசியை இருப்போர் உணர்வதற்காய்
இல்லாமல் ஓர்நாள் இரு
(6)
நல்லவராய் வாழ்பவரின் நற்குணங்கள் போவதற்காய்ப்
பல்துயர் செய்யும் பசி
(7)
வறுமையின் உச்சத்தில் வாடுகின்ற போதும்
பொறுப்போர்க்கேக் கிட்டும் புகழ்
(8)
ஈவோரைத் தேடி இரந்துபோய் உண்ணாமல்
சாவோரும் உள்ளார் தனித்து
(9)
கிட்டங்கில் சேர்த்ததெல்லாம் கிட்டாமல் வீணானால்
நட்டமிங்கு யார்க்கு நவில்?
(10)
செ. இராசா
No comments:
Post a Comment