எத்தனையோ பனையிலேறி 
.....இறக்குகின்ற கள்ளினை
மொத்தமாக ஊற்றிவிட்டு 
.....மூட்டவேண்டும் தீயினை
அத்தனையும் சுண்டிவந்தால்
....ஆகிவரும் பாகினை
பத்திரமாய் நூல்களிட்ட 
......பாத்திரத்தில் ஊற்றியே..
நாலுபத்து நாலிரண்டு 
....நாட்களான பின்னராய்
நூலுபற்றித் தொங்கியங்கே
.....முத்துமுத்தாய் மாறுமே
நூலையத்து நீரைவிட்டு 
.....நுட்பமாக முக்கவே
பாலையொத்த கற்கண்டை 
.....பார்க்கலாமே நீங்களே...
(45
 க்கும் மேற்பட்ட பனைமரங்கள் ஏறி இறக்கும் 200 லிட்டர் கள்ளைக் கொதிக்க 
வைத்து, அதை நூல்கள் கட்டிய பெட்டியில் ஊற்றி 48 நாட்கள் காத்திருந்தால் 
வெறும் 5 கிலோ அளவிலான கற்கண்டே கிடைக்குமாம். அப்படிக் கிடைக்கும் 
கற்கண்டின் மகத்துவமோ அளவிட முடியாதது. ஆனால், பனைமரத் தொழிலாளர்களின் 
வாழ்வியலில்தான் இன்னும் ஏற்றம் வரவில்லை என்பது வேதனையான உண்மையே) 
13/11/2022
பனங்கற்கண்டு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment