காசுகாசு காசு;என்று 
........காசுதேடும் கூட்டமே
காசுகோடி கிட்டினாலும்
.......காசினாசை தீருமோ?
தூசுதூசு காசு;என்று 
தூசுகாசு தந்திடாமல் 
........சூழ்ந்தநோயும் தீருமோ?!
கோக்குமாக்கு செஞ்சுசெஞ்சு 
.......கொண்டுபோகும் கூட்டமே
நாக்குநீண்டு செத்தபின்னே 
........வந்தசெல்வம் போகுமோ?!
சாக்குபோக்கு சொல்லிசொல்லி 
........சாடுகின்ற கூட்டமே
வாக்குமாற காசுவாங்கும்
........நாடு;என்று மாறுமோ?
(புணர்ச்சி விதிப்படி காசு என்று- காசென்று வந்தாலும், இசைப்பாடலாக மாறும்போது காசு;என்று பாடவேண்டும் என்பதற்காகவே ; குறியீடு வைத்துள்ளேன்) 

No comments:
Post a Comment