தற்பெருமை பாடும் சபையென்று கண்டால்
....தள்ளியே நிற்க வேண்டும்!
கற்றவர்கள் பேசும் சபையென்று கண்டால்
....கண்ணியம் காக்க வேண்டும்!
அற்பர்கள் கூடும் அவையென்று கண்டால்
....அந்நியம் ஆக வேண்டும்!
உற்றவர்கள் சூழும் இடமென்று கண்டால்
.....உண்மையில் போக வேண்டும்!
No comments:
Post a Comment