எல்லோரும் நன்றாக எழுத வேண்டும்!
.... இத்தேர்வில் மதிப்பெண்ணைக் குவிக்க வேண்டும்!
கல்வியெலாம் கற்றவராய் உயர வேண்டும்!
.....கையெழுத்தால் தலையெழுத்தே திருந்த வேண்டும்!
நல்வழியில் வெற்றிபல கொடுக்க வேண்டும்!
......நல்லவனாய் பெயரெடுக்க முயல வேண்டும்!
வல்லவனாய் வையமெல்லாம் புகழ வேண்டும்!
.....வாழ்த்துமழை பெருகயிலும் பணிவு வேண்டும்!
வாழ்க வளமுடன்!!!

(நானே இப்பதான் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதியதாகத் தோன்றுகிறது. இன்று #என்_பையன் எழுதுகிறான். வாழ்க்கை எவ்வளவு வேகமாகப் போகிறது பாருங்களேன்....
அப்படியே தங்களின் வாழ்த்துகளையும் வழங்க வேண்டுகிறேன்)
No comments:
Post a Comment