25/02/2025

பொம்ம பொம்மதா தையதையதா




அண்டம் பிண்டமாய்
அங்கும் இங்குமாய்
எங்கெங்கும் நிறைந்தவன் அரோகரா....

அன்றும் இன்றுமாய்
இன்றும் என்றுமாய்
என்றென்றும் இருப்பவன் அரோகரா....

அங்கம் தங்கமாய்
மின்னும் வைரமாய்
எங்கெங்கும் ஜொலிப்பவன் அரோகரா...

சொந்த பந்தமாய்
அந்தம் ஆதியாய்
என்றைக்கும் வருபவன் அரோகரா...

பற்றித் தாவிட பற்றித் தாவிட
பற்றைத் தந்திடும் பாசம் விடுபட
பற்....றிடும் தெய்வமே அரோகரா...

✍️செ. இராசா 

No comments: