திராவிடக் கைகொண்டு செந்தமிழர் மேலே
திராவகம் வீசியுள்ளார் சேர்ந்து!
(1)
சோழர்கள் வீழ்ந்தபின் சூழ்ச்சிவலை பின்னியவர்
ஆழமாய் மேலமர்ந்தார் அன்று!
(2)
நாயக்கர் ஆட்சியில்தான் நம்மண்ணைத் தேடிவந்து
தாயகம்போல் மாற்றிவிட்டார் சார்ந்து!
(3)
வந்ததும் தப்பில்லை வாழ்ந்ததும் தப்பில்லை
தந்தை யெனச்சொன்னால் தப்பு!
(4)
பெயரோ கணேசனாம் பின்போவர் சர்ச்சாம்
உயர்த்துவது நாத்திகமாம் ஓய்!
(5)
திராவிடம் என்னும் திரைநீக்கிப் பார்த்தால்
இராக்கொள்ளை கூட்டம்தான் இங்கு!
(6)
கட்டபொம்மு நாயக்கர் கத்துவது போலமைத்த
கட்டுக் கதையெல்லாம் பொய்!
(7)
எத்தனை பேரை இழந்துவிட்டோம் ஈழத்தில்
அத்தனைக்கும் காரணம்யார் அன்று?
(8)
இனவுணர்வை மீட்டால் எழுந்திடலாம் மீண்டும்
மனவுறுதி கொண்டெழுந்து வா!
(9)
தமிழ்மண்ணில் வாழ்ந்தும் தமிழுணர்வு அற்றோர்
தமிழரல்லாத் தீவிடரே தான்!
(10)
No comments:
Post a Comment