பல்லவி
**********
எத்தனை எத்தனை அதிசயங்கள்
எல்லாம் அன்னை அருளாளே.
எத்தனை எத்தனை சம்பவங்கள்
எல்லாம் ஆண்டவர் பெயராலே..
பதினெட்டு தடவை காட்சிதந்த
பரிசுத்த லூர்து மாதாவே...
பாவத்தைக் கழுவத் தோற்றுவித்த
நீரே.....சாட்சி மரியாவே..
பரிசுத்த லூர்து மாதாவே...
நீரே.....சாட்சி மரியாவே..
பரிசுத்த லூர்து மாதாவே
நீரே.....சாட்சி மரியாவே..
சரணம்-1
*********
பாவங்கள் பெருத்த பூமியிலே
பரமப் பிதாவை மறந்தனரே...
வேகங்கள் நிறைந்த வாழ்வினிலே
வேத வார்த்தையைத் துறந்தனரே.. (2)
மறந்ததைத் துறந்ததை மீட்டுவிக்க
வருவது இறைவனின் கருணையன்றோ..
சிறந்ததைத் தெளிந்திடக் தோற்றுவித்தே
அதிசயம் புரிந்திடல் அருளன்றோ...
பரிசுத்த லூர்து மாதாவே...
நீரே.....சாட்சி மரியாவே..
பரிசுத்த லூர்து மாதாவே
நீரே.....சாட்சி மரியாவே..
சரணம்-2
**********
பெர்னதத் சூபிருஸ் கண்களிலே
ஒளியென மின்னிய அன்னையன்றோ...
மசபியேல் குகையில் ஊற்றுவர
நதியென பெருக்கிய வள்ளலன்றோ...(2)
ஒளிவழி நதிவழி உணர்ந்திடவே
அருள்வழி இதுவென அறிவீரோ...
இறைவழி சரிவழி அறிந்தபின்னே
அதன்வழி நடந்திட வருவீரோ..
பரிசுத்த லூர்து மாதாவே...
நீரே.....சாட்சி மரியாவே..
பரிசுத்த லூர்து மாதாவே
நீரே.....சாட்சி மரியாவே..செ. இராசா
No comments:
Post a Comment