06/02/2025

பார்யாநீ பாட்டுக்கு

 


பார்யாநீ பாட்டுக்கு
......பாட்டுக்கா செய்றீயே..
யார்தான்யா பாக்குறா
..,....இப்பாட்ட- ஆர்வமா
ஒவ்வொரு வாட்டியும்
........ஓகோன்னு சொல்றீயே
எவ்வளவு போகும்
......இதுக்கு?

எத்தனையோ செஞ்சாலும்
..... இம்முறை செஞ்சதுதான்
அத்தனைக்கும் முத்தாய்ப்பாய்
......ஆனதென்பேன்- சத்தியமா
இப்பாடல் வெற்றிபெறும்
.......இஃதெந்தன் வாக்காகும்
அப்போது சொல்றேன்
.......அதை!

✍️செ. இராசா

No comments: