26/02/2025
தத்தாக்காரம் போட்டுத்தானே பாடுறேன்
25/02/2025
பொம்ம பொம்மதா தையதையதா
அண்டம் பிண்டமாய்
அங்கும் இங்குமாய்
எங்கெங்கும் நிறைந்தவன் அரோகரா....
அன்றும் இன்றுமாய்
இன்றும் என்றுமாய்
என்றென்றும் இருப்பவன் அரோகரா....
அங்கம் தங்கமாய்
மின்னும் வைரமாய்
எங்கெங்கும் ஜொலிப்பவன் அரோகரா...
சொந்த பந்தமாய்
அந்தம் ஆதியாய்
என்றைக்கும் வருபவன் அரோகரா...
பற்றித் தாவிட பற்றித் தாவிட
பற்றைத் தந்திடும் பாசம் விடுபட
பற்....றிடும் தெய்வமே அரோகரா...செ. இராசா
19/02/2025
தெய்வத்தால் ஆகாதோ

செ. இராசா
18/02/2025
ஒன்றாய்ப் பிறந்தாலும்
ஒன்றாய்ப் பிறந்தாலும்
.......ஒன்றாய் இருந்தாலும்
ஒன்றுபோல் ஒன்றில்லை
.....உற்றுப்பார்- நன்றாய்க்
கனிந்தகனி ஒன்றிருக்கக்
.......காயாக ஏனோக்
கனியாமல் மற்றொன்றைக்
.......காண்!
மேகத்தை வெட்டிவந்து
மேகத்தை வெட்டிவந்து
......மின்னலெனக் கீற்றாக்கி
நாகம் சுழன்றதுபோல்
.......வார்த்தெடுத்தத்- தேகத்தைப்
பார்த்த உடனேயே
........பாலூற்ற எண்ணுகையில்
நீர்வருதே....நாக்கடியில்
........நேக்கு!

15/02/2025
தேர்வெழுதும் மாணவர்களுக்காக
எல்லோரும் நன்றாக எழுத வேண்டும்!
.... இத்தேர்வில் மதிப்பெண்ணைக் குவிக்க வேண்டும்!
கல்வியெலாம் கற்றவராய் உயர வேண்டும்!
.....கையெழுத்தால் தலையெழுத்தே திருந்த வேண்டும்!
நல்வழியில் வெற்றிபல கொடுக்க வேண்டும்!
......நல்லவனாய் பெயரெடுக்க முயல வேண்டும்!
வல்லவனாய் வையமெல்லாம் புகழ வேண்டும்!
.....வாழ்த்துமழை பெருகயிலும் பணிவு வேண்டும்!
வாழ்க வளமுடன்!!!

(நானே இப்பதான் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதியதாகத் தோன்றுகிறது. இன்று #என்_பையன் எழுதுகிறான். வாழ்க்கை எவ்வளவு வேகமாகப் போகிறது பாருங்களேன்....
அப்படியே தங்களின் வாழ்த்துகளையும் வழங்க வேண்டுகிறேன்)
12/02/2025
திராவிடக் கைகொண்டு
திராவிடக் கைகொண்டு செந்தமிழர் மேலே
திராவகம் வீசியுள்ளார் சேர்ந்து!
(1)
சோழர்கள் வீழ்ந்தபின் சூழ்ச்சிவலை பின்னியவர்
ஆழமாய் மேலமர்ந்தார் அன்று!
(2)
நாயக்கர் ஆட்சியில்தான் நம்மண்ணைத் தேடிவந்து
தாயகம்போல் மாற்றிவிட்டார் சார்ந்து!
(3)
வந்ததும் தப்பில்லை வாழ்ந்ததும் தப்பில்லை
தந்தை யெனச்சொன்னால் தப்பு!
(4)
பெயரோ கணேசனாம் பின்போவர் சர்ச்சாம்
உயர்த்துவது நாத்திகமாம் ஓய்!
(5)
திராவிடம் என்னும் திரைநீக்கிப் பார்த்தால்
இராக்கொள்ளை கூட்டம்தான் இங்கு!
(6)
கட்டபொம்மு நாயக்கர் கத்துவது போலமைத்த
கட்டுக் கதையெல்லாம் பொய்!
(7)
எத்தனை பேரை இழந்துவிட்டோம் ஈழத்தில்
அத்தனைக்கும் காரணம்யார் அன்று?
(8)
இனவுணர்வை மீட்டால் எழுந்திடலாம் மீண்டும்
மனவுறுதி கொண்டெழுந்து வா!
(9)
தமிழ்மண்ணில் வாழ்ந்தும் தமிழுணர்வு அற்றோர்
தமிழரல்லாத் தீவிடரே தான்!
(10)
10/02/2025
போனத் தூக்கிப் போடுடா
ஆண்:
போனத் தூக்கிப் போடுடா
கேம விட்டு வாயேன்டா
ஒரே லைஃப்பு போனா போச்சுதடா
ரீல்சு பார்த்தாப் போதுமா
சார்ட்சு லைஃபக் கொடுக்குமா
காலம் போனா எல்லாம் போச்சுதடா
ஆண்:
திங் மன்னுடா மவனே திங் பன்னுடா .....மவளே திங் பன்னுடா மவளே திங் பன்னுடா
ஆண்:
ஒரு கண்டன்ட் ஒன்னு வரசொல்ல
இன்னோர் கண்டன்ட் பூந்திடும்
டிரெண்டிங் தாவல் இங்கே தர்மமடா ஹோ ஹோ...
குழு:
போன விட்டிடு
வேணாம் விட்டிடு
ஆண்:
போனத் தூக்கிப் போடுடா
கேம விட்டு வாயேன்டா
ஒரே லைஃப்பு போனா போச்சுதடா
....*BGM*....
ஆண்:
சின்னூன்டு பிள்ளைங்க மனசில்
பாய்சன் போட்டு விதைக்குமே
குழு:
தப்புடா தம்பி அது தப்புடா
ஆண்:
கண்ணப் பார்த்து பேச சொல்ல போனக்குனிஞ்சு பார்க்குற
குழு:
தப்புடா தம்பி அது தப்புடா
ஆண்:
பரிட்சைக்காக படிக்க நினைக்கும்போது
உன் கையிக்குள்ள போனெதுக்கு சொல்றா சின்னப்பையா
குடும்பத்தோட ஒன்னா இருக்கும்போது
நீ கேமுக்காக போறதெதுக்கு
சொல்றா குட்டிப்பையா
ஆண்:
இதுக்கு ஏன் உசிர
கொடுக்கணும்
எது நிஜம் புரிஞ்சி நடக்கணும்
போனு ஒன்னியும் கடவுள்
இல்லையடா இந்த கருமம்
எல்லாம் ஹார்மோன்
செய்யும் கலகம் தானடா
*குழு*:
போனத் தூக்கிப் போடுடா
கேம விட்டு வாயேன்டா
ஒரே லைஃப்பு போனா போச்சுதடா
.....*BGM*...
குழு:
ரீல்சு பார்த்தாப் போதுமா
சார்ட்சு லைஃபக் கொடுக்குமா
காலம் போனா எல்லாம் போச்சுதடா
......*BGM*
குழு:
போடு வா
பிள்ளைங்களா ஏய் வாம்மா
ஆண்:
பார்க்கப்போனா
மனுஷனுக்கு போனு ரொம்ப தேவைதான்
குழு:
நல்லது உண்மையும் உள்ளது
ஆண்:
அதுக்காக போனுக்குள்ளேயே மூழ்குவது தப்புதான்
குழு:
சொன்னது
தெளிஞ்சவன் சொன்னது
ஆண்:
ரீல்சு போட்டு லைக்சு
வாங்கிடும் எல்லாம்
நாள் கடந்திட்டா சீண்டக் கூட நாதி இல்லையடா...
ஒருத்தன் போயி
ஒருத்தன் வருவான் இங்கே
உன் டைமுதான் வீணாப் போகும்
நீயும் யோசிடா...
ஆண்:
அய்யய்யோ இதுக்கா விழுகுற
லைஃபையே ஏன்டா கடத்துற
ட்ரெண்டிங் எல்லாம் மாயை தானடா
அது புரிஞ்சுட்டா இன்ஸ்டாயெல்லாம் சொம்மா வீணடா...டே டே.டே
குழு:
போனத் தூக்கிப் போடுடா
கேம விட்டு வாயேன்டா
ஒரே லைஃப்பு போனா போச்சுதடா
ரீல்சு பார்த்தாப் போதுமா
சார்ட்சு லைஃபக் கொடுக்குமா
காலம் போனா எல்லாம் போச்சுதடா
ஆண்:
ஒரு கேமு ஒன்னு வர சொல்ல
இன்னோர் கேமு பூந்திடும்
டிரெண்டிங் தாவல் இங்கே தர்மமடா ஹோ ஹோ...
ஆண்:
போனத் தூக்கிப் போடுடா
கேம விட்டு வாயேன்டா
ஒரே லைஃப்பு போனா போச்சுதடா
ஆண்:
திங் பன்னுடா மவனே...
குழு: காலம் போனா எல்லாம் போச்சுதடா
ஆண்:
திங் பன்னுடா மவனே.....செ. இராசா
#ஆண்:
போனத் தூக்கிப் போடுடா
கேம விட்டு வாயேன்டா
ஒரே லைஃப்பு போனா போச்சுதடா
ரீல்சு பார்த்தாப் போதுமா
சார்ட்சு லைஃபக் கொடுக்குமா
காலம் போனா எல்லாம் போச்சுதடா
#ஆண்:
திங் பன்னுடா மவனே திங் பன்னுடா .....மவளே திங் பன்னுடா மவளே திங் பன்னுடா
*ஆண்*:
ஒரு கண்டன்ட் ஒன்னு வரசொல்ல
இன்னோர் கண்டன்ட் பூந்திடும்
டிரெண்டிங் தாவல் இங்கே தர்மமடா ஹோ ஹோ...
*குழு*:
போன விட்டிடு
வேணாம் விட்டிடு
*ஆண்*:
போனத் தூக்கிப் போடுடா
கேம விட்டு வாயேன்டா
ஒரே லைஃப்பு போனா போச்சுதடா
....*BGM*....
*ஆண்*:
சின்னூன்டு பிள்ளைங்க மனசில்
பாய்சன் போட்டு விதைக்குமே
*குழு*:
தப்புடா தம்பி அது தப்புடா
*ஆண்*:
கண்ணப் பார்த்து பேச சொல்ல போனக்குனிஞ்சு பார்க்குற
*குழு*:
தப்புடா தம்பி அது தப்புடா
*ஆண்*:
பரிட்சைக்காக படிக்க நினைக்கும்போது
உன் கையிக்குள்ள போனெதுக்கு சொல்றா சின்னப்பையா
குடும்பத்தோட ஒன்னா இருக்கும்போது
நீ கேமுக்காக போறதெதுக்கு
சொல்றா குட்டிப்பையா
*ஆண்* :
இதுக்கு ஏன் உசிர
கொடுக்கணும்
எது நிஜம் புரிஞ்சி நடக்கணும்
போனு ஒன்னியும் கடவுள்
இல்லையடா இந்த கருமம்
எல்லாம் ஹார்மோன்
செய்யும் கலகம் தானடா
*குழு*:
போனத் தூக்கிப் போடுடா
கேம விட்டு வாயேன்டா
ஒரே லைஃப்பு போனா போச்சுதடா
.....*BGM*...
*குழு*:
ரீல்சு பார்த்தாப் போதுமா
சார்ட்சு லைஃபக் கொடுக்குமா
காலம் போனா எல்லாம் போச்சுதடா
......*BGM*
*குழு* :
போடு வா
பிள்ளைங்களா ஏய் வாம்மா
*ஆண்*:
பார்க்கப்போனா
மனுஷனுக்கு போனு ரொம்ப தேவைதான்
*குழு*:
நல்லது உண்மையும் உள்ளது
*ஆண்*:
அதுக்காக போனுக்குள்ளேயே மூழ்குவது தப்புதான்
*குழு* :
சொன்னது
தெளிஞ்சவன் சொன்னது
*ஆண்* :
ரீல்சு போட்டு லைக்சு
வாங்கிடும் எல்லாம்
நாள் கடந்திட்டா சீண்டக் கூட நாதி இல்லையடா...
ஒருத்தன் போயி
ஒருத்தன் வருவான் இங்கே
உன் டைமுதான் வீணாப் போகும்
நீயும் யோசிடா...
*ஆண்*:
அய்யய்யோ இதுக்கா விழுகுற
லைஃபையே ஏன்டா கடத்துற
ட்ரெண்டிங் எல்லாம் மாயை தானடா
அது புரிஞ்சுட்டா இன்ஸ்டாயெல்லாம் சொம்மா வீணடா...டே டே.டே
*குழு*:
போனத் தூக்கிப் போடுடா
கேம விட்டு வாயேன்டா
ஒரே லைஃப்பு போனா போச்சுதடா
ரீல்சு பார்த்தாப் போதுமா
சார்ட்சு லைஃபக் கொடுக்குமா
காலம் போனா எல்லாம் போச்சுதடா
*ஆண்*:
ஒரு கேமு ஒன்னு வர சொல்ல
இன்னோர் கேமு பூந்திடும்
டிரெண்டிங் தாவல் இங்கே தர்மமடா ஹோ ஹோ...
*ஆண்*:
போனத் தூக்கிப் போடுடா
கேம விட்டு வாயேன்டா
ஒரே லைஃப்பு போனா போச்சுதடா
*ஆண்*:
திங் பன்னுடா மவனே...
குழு: காலம் போனா எல்லாம் போச்சுதடா
*ஆண்*:
திங் பன்னுடா மவனே.....செ. இராசா