17 வருடங்களுக்கு மேலாக கத்தாரில்நான் பணிபுரிந்தாலும் பெட்ரோலிய நிறுவனத்திற்காக வேலைபார்க்கும் பிரத்தியோகமான தொழிலாளர் குடியிருப்பில் சென்று வந்தது என்னவோ இதுதான் முதல்முறை. அதுவும் நம்ம சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த நண்பர் மற்றும் பொறியாளரின் அழைப்பின் பேரில் குடியிருப்பை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. (பொதுவாக வெளிப்புறங்களை அனுமதி இல்லாமல் ஒளிப்படம் எடுக்கக் கூடாது என்பதால் இங்கே பதிவிடவில்லை)
இங்கேயுள்ள பொறியாளர்களின் அறைகள், தொழிலாளர்களின் அறைகள், தேநீர் அங்காடி, விளையாட்டு மைதானமென்று ஒவ்வொன்றாக சுற்றிக் காண்பித்தபடி இறுதியாக
அருமையான
சுவையான தற்பகிர் உணவக அறைக்கு கூட்டிப்போய் ஒரு விருந்தும் அளித்தார். உண்மையில் மிகவும் இனிமையான சுவையான அனுபவமாக இருந்தது.செ. இராசா
No comments:
Post a Comment