நேற்றைய நினைவுகளை
இன்றைக்கு அசைபோடும் 
அதே வேளையில்;
இன்றைய நிகழ்வுகளை
இன்றைக்கே மறந்துவிடும்
முரணான ஆசிரியன்!
புத்தருக்கே புத்தி தந்த
முதலாம் குரு!
நரைத் தூதுவன் மூலம் 
வெள்ளைக் கொடி காட்டுகின்ற
காரியவாதி!
பட்டபின் உணரும்
மாணவன்!
கெட்டபின் புலம்பும் 
சிறைக்கைதி!
ஏக்கமுடன் வாழும் 
அகதி!
சொல்லிச் சொல்லி காட்டும் 
குழந்தை!
நோயின் அழையா 
விருந்தாளி!
பாயின் நிரந்தரக் 
கூட்டாளி!
இளமைக்குப் பிடிக்கா 
இலக்கியவாதி!
எமனுக்குப் பிடித்த 
இலட்சியவாதி!
#முதுமை
செ. இராசா
(படம் FACE APPல் மாற்றம் செய்தது)

No comments:
Post a Comment