புதுக்கவிதை
இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
06/09/2022
அவன் அடங்காதவன்...
அவன்
#அடங்காதவன்
...
ஆம்...அடங்காதவன்தான்
எந்த அமைப்பிற்குள்ளும் அடங்காதவன்....
அவன்
#விளங்காதவன்
ஆம்...விளங்காதவன்தான்
எந்தப் பழமைவாதிக்கும் விளங்காதவன்...
அவன்
#கர்வமுள்ளவன்
ஆம்...கர்வமுள்ளவன்தான்
தான் தமிழனென்ற கர்வமுள்ளவன்..
அவன்
#பைத்தியக்காரன்
ஆம்...பைத்தியக்காரன்தான்
துக்கத்திலும் சிரிக்கின்ற பைத்தியக்காரன்...
அவன்
#சரியான_கிறுக்கன்
ஆம்...
#சரியான
கிறுக்கனேதான்...
இதிலென்ன சந்தேகம்....?!!
செ. இராசா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment