மூவேந்தரால் கர்வம் கொள்ளும் நாம்தான்
சேரனை மட்டும் கேரளனாய்ப் பார்க்கிறோம்...
பாரம்பரியப் பெருமை பேசும் நாம்தான்
சிவப்பரிசி கண்டால் கேலி செய்கிறோம்...
மற்ற மீன்களை வளைத்துக் கட்டும்நாம்தான்
மத்திமீனை மட்டும் மட்டமாய்ப் பார்க்கிறோம்....
சூரியகாந்தியில் வடை சுடும் நாம்தான்
தேங்காய் எண்ணையைக் கொழுப்பென்கிறோம்
உருளைக்கிழங்கில் சிப்ஸ்தேடும் நாம்தான்
மரவள்ளிக் கிழங்கைத் தட்டிக் கழிக்கிறோம்...
மரபின் பெருமையைப் ஓகோவெனும் நாம்தான்
மரபணு மாற்றிய காய்கறி உண்கிறோம்...
விளைநிலத்தில் விவசாயம் செய்த நாம்தான்
விலைநிலம் இதுவென விளம்பரம் செய்கிறோம்...
அட...
நாம் முற்போக்கு வாதிகள் அல்லவா??
செ. இராசா
(பாரம்பரிய உணவு உட்கொள்ளும் மலையாள உறவுகளுக்கு ஓண வாழ்த்துகள் உரித்தாகட்டும்)
No comments:
Post a Comment